தமிழ் - தமிழ் அகரமுதலி - அசாரம் முதல் - அசுவகந்தி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அசுரமணம் | எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் . |
| அசுரமந்திரி | காண்க : அசுரகுரு . |
| அசுரர் | அவுணர் , நிசிசரர் , தேவர்களின் பகைவர் , இராக்கதர் ; பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர் . |
| அசுரவாத்தியம் | முரசு முதலிய பேரொலி எழுப்பும் இசைக்கருவி . |
| அசுரவைத்தியம் | அறுவைச் சிகிச்சை . |
| அசுரை | இராசி ; இருள் ; பொதுமகள் ; அரக்கியர் . |
| அசுவகதி | குதிரை நடை ; அவை : மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி . |
| அசுவகந்தி | அமுக்கிரா என்னும் ஒரு மருந்துச் செடி . |
| அசாரவாசி | அரசனது வாயில் காப்பவன் . |
| அசாவாமை | தளராமை . |
| அசாவிடுதல் | இளைப்பாறுதல் . |
| அசாவுதல் | இளைப்படைதல் ; தளர்தல் . |
| அசாவேரி | ஒரு பண் . |
| அசி | படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா . |
| அசிகை | நகைத்துப் பேசும் பேச்சு . |
| அசிங்கம் | தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது . |
| அசித்தம் | முடிக்கப்படாதது . |
| அசித்தல் | உண்டல் ; அழித்தல் ; சிரித்தல் . |
| அசித்திரன் | கள்வன் . |
| அசித்து | அறிவற்ற பொருள் , சடப்பொருள் . |
| அசிதம் | கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது . |
| அசிதன் | வெல்லற்கு அரியோன் ; சிவன் ; திருமால் ; புத்தன் ; தந்தை ; சனி . |
| அசிதாரு | ஒரு நரகம் . |
| அசிதை | அவுரி ; சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று . |
| அசிந்தம் | சிந்திக்கப்படாதது ; ஒரு பேரெண் ; இறப்பு . |
| அசிந்திதன் | சிந்திக்கப்படாதவன் ; மனத்துக்கு எட்டாதவன் . |
| அசிந்தியம் | சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண் . |
| அசிப்பு | ஏளனச் சிரிப்பு . |
| அசிபத்திரகம் | கரும்பு . |
| அசிபதம் | தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் . |
| அசிர்த்தல் | காண்க : அயிர்த்தல் . |
| அசிரத்தை | அக்கறையின்மை ; கவனிப்பு இல்லாமை ; ஊக்கமின்மை . |
| அசிரம் | உடல் ; அற்பகாலம் ; காற்று ; தவளை ; முன்றில் ; தலையற்றது , முண்டம் ; தீ . |
| அசிரவணம் | செவிடு , காதுமந்தம் . |
| அசிரன் | அக்கினி ; சூரியன் : கவந்தன் . |
| அசினம் | விலங்கின் தோல் ; மானின் தோல் ; தோலிருக்கை . |
| அசீதி | எண்பது ; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு . |
| அசீரணம் | செரியாமை ; பசியின்மை ; அழிவு படாதது . |
| அசீரியம் | அழியாதது . |
| அசு | மூச்சு ; உயிர்வளி ; துன்பம் . |
| அசுக்காட்டுதல் | எள்ளல் , பரிகசித்தல் . |
| அசுகுசுத்தல் | அருவருத்தல் ; ஐயுறுதல் . |
| அசுகுணி | செடிப்பூச்சி வகையுள் ஒன்று ; காதில் வரும் கரப்பான் . |
| அசுகை | அருவருப்பு ; ஐயம் . |
| அசுசி | தூய்மையின்மை , அழுக்கு ; அருவருப்பு . |
| அசுணம் | இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு . |
| அசுணமா | இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு . |
| அசுணன் | வெள்ளை வெங்காயம் . |
| அசுத்ததத்துவம் | தத்துவவகை மூன்றனுள் ஒன்று . |
| அசுத்தப்பிரபஞ்சம் | கலாதத்துவம் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம் . |
| அசுத்தமாயை | அசுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமான மாயை . |
| அசுத்தி | தூய்மையின்மை , அழுக்கு ; ஆணவமலம் . |
| அசுத்தை | அழுக்குடையவள் . |
| அசுப்பு | சடுதி , விரைவு . |
| அசுபக்கிரகம் | தீக்கோள் . |
| அசுபகக்கிரியை | இறந்தார்க்குச் செய்யும் சடங்கு . |
| அசும்பு | கிணறு ; சேறு ; நீர்ப்பொசிவு ; சிறுதிவலை ; வழுக்குநிலம் ; அசைவு ; ஒளிக்கசிவு ; பற்று ; குற்றம் ; களை . |
| அசும்புதல் | நீர் ஊறுதல் . |
| அசுமம் | இடியேறு ; கல் ; தீத்தட்டிக்கல் ; முகில் ; மணமற்ற மலர் . |
| அசுமாற்றம் | சாடை ; ஐயம் . |
| அசுமானகிரி | மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன . |
| அசுரகுரு | அசுரர்களின் ஆசிரியனான சுக்கிரன் . |
| அசுரசந்தி | அந்திப்பொழுது ; இரணிய வேளை . |
| அசுரநாள் | மூலநாள் . |
| அசுரம் | எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் . |
| அசாரம் | சாரமற்றது ; ஆமணக்கு ; அரசவை மண்டபம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அசாரம் முதல் - அசுவகந்தி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், புள், ஒன்று, முதலிய, ஐயம், அருவருப்பு, பேரெண், தோல், தூய்மையின்மை, ஒருவகைப், விலங்கு, ஒருவகை, கேகயப், இசையறியும், அழுக்கு, பேச்சு, தழுவுதல், வீரச்செயல், வில்லேற்றுதல், மணங்களுள், எண்வகை, புரிந்து, செய்துகொள்ளும், என்னும், அசுரகுரு, காண்க, மணம், சொல்

