புதுக் கவிதைகள் - காதல் ஒரு ...
- இ. லியோன் காதல் ஒரு காவியம் ஆம்! காவியத்திலே சோகங்கள் உண்டு காதல் ஒரு கடல் ஆம்! கடலிலே விபத்துக்கள் உண்டு காதல் ஒரு கவிதை ஆம்! கவிதையிலே கற்பனைகள் உண்டு காதல் ஒரு கானகம் ஆம்! கானகத்திலே ஆபத்துக்கள் உண்டு காதல் ஒரு கற்பனை ஆம்! கற்பனையிலும் இன்பங்கள் உண்டு காதல் ஒரு கற்பூரம் ஆம்! கற்பூரத்திலே ஒளிகளுண்டு காதல் ஒரு காற்று ஆம்! காற்றிலே தென்றல் உண்டு காதல் ஒரு காவியம் ஆம்! காவியத்திலே தியாகங்கள் உண்டு காதல் ஒரு கற்பு ஆம்! கற்பிலே ஒழுக்கங்கள் உண்டு காதல் ஒரு காதல் ஆம்! காதலிலே காதல்கள் உண்டு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதல் ஒரு ... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - காதல், உண்டு