புதுக் கவிதைகள் - நானாகப் பதிக்கப்பட்ட பதிவு நீ
- அன்பு வேந்தன் - அமெரிக்கன் கல்லூரி கல்லூரி மரக்கிளையில் தொடங்கி, வகுப்பறையின் மரபெஞ்சிலும்... கழிப்பறைச் சுவர்களிலும்... பேருந்தில் சீட்டின் பின்புறங்களிலும்... பதிவு செய்த உன்பெயரை என் இடப்புற மார்பிலும் பச்சைகுத்தி விட்டு எனக்கும் உன்பெயரே சூட்டிக்கொண்டு, உரக்க விளித்தேன் உன்பெயரை ஒலித்தது என் பெயர்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நானாகப் பதிக்கப்பட்ட பதிவு நீ - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -