ஹைக்கூ - புள்ளிப் பூக்கள்
- அமுத பாரதி எடுத்து உடுத்தும் நான் வெட்கினேன் துளிர்த்து உடுத்தும் மரம். அசை போடும் மாடு வயிற்றுக்குள் புல்வெளி. ஆறித்தான் போயிருக்கிறது. ஆனாலும் விரும்பி உண்கிறேன் தோசையில் மனைவி மனம். எரியும் பிணங்கள் வெட்டியான் குடிசையில் சமையல். தேடிக் கொண்டே ஏறினேன் மாடியில் கிடந்தது நிழல்! அதிர்ச்சி சுவரோரம் ஒடுங்கும் கோழி இறைச்சிக் கடை. வழி விடுங்கள் பாரம் சுமந்து வருகிறது நத்தை. ஏ, நெருப்பே! பூனையை விரட்டேன்... ஏழை வீட்டு அடுப்பு. வீட்டுக்குள் வந்து நனைந்தேன் அன்பு மழலை. எம்மதமும் சம்மதமே பிணம் உண்ணும் மண். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புள்ளிப் பூக்கள் - ஹைக்கூ - Poems - கவிதைகள் -