திருப்பூர் - தமிழக மாவட்டங்கள்
இம்மாவட்டத்தில் காணப்படும் காடுகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
1. போலம்பட்டிப்பள்ளத்தாக்கு. கோயம்புத்தூர் - சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. இங்கு வாகை, கருவாகை, வேல்வாகை, பில்லமருது, தாடச்சி, கெங்கை, ஈட்டி, வெண்தேக்கு, வெள்ளநாகை, சாதாதேக்கு போன்ற உயர்ந்த மரங்களும் உள்ளன. 5000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் வேடிப்பில்லா, பால் வடிஞ்சான், காட்டுப்பன்னை, மலைக்கொன்னை நாங்கு மரங்களும் வளர்ந்துள்ளன.
2. தாடகம் பள்ளத்தாக்கு - ஊஞ்சல், காட்டு எலுமிச்சை, தெரணை, புல்லாவரம், பொரசு, மலைக்கிளுவை, தணக்கு போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.
3. டாப்ஸ்லிப் பகுதி - இங்கு 70 அங்குலம் மழை பெறுவதால், 150 அடி உயர மரங்கள் வளர்கின்றன.
4. ஆனைமலை காடுகள் - துணக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது. இங்கு அதிக மழை பெறுவதால் காடுகள் செறிந்து காணப்படுகின்றன.
5. பொள்ளச்சி பகுதி - இங்கு தேக்கு, கருமருது, கடுக்காய், ஓதியமரம், இலவமரம், பெருமூங்கில், கல்மூங்கில் மிகுதியாக உள்ளன.
ஆறுகள்:
பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
அணைகள்
நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லுர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.
அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
நீர்மின் திட்டம்:
பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்மின் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
தொழிற்பேட்டைகள்:
குறிஞ்சி, திருப்பூர், சிறுமுகை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுதொழிற்கள் வளர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கு இத்தொழிற்பேட்டைகள் இடங்களைத் தந்துள்ளது.
ஜி.ஆர். தாமோதரன், இவர் கலைக்கதிர் என்கிற மாதஇதழ் மூலம் அறிவியல் தமிழ் வளர்ந்து வந்தார். இவர் சென்னைப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருமுறை இருந்தவர்.
டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் - இவர் கல்விஅமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு கல்வியை எடுத்துச்சென்றவர். மற்ற கோவை நகரப் பிரமுகர்கள் கோவை அய்யாமுத்து தோழர் பாலதண்டாயுதம், நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார், சி. சுப்பிரமணியம், அரங்கநாயகம், எஸ். மோகன் குமாரமங்கலம், ஜஸ்டிஸ். எஸ். மோகன், புதுமைப்பித்தன், சிவக்குமார், கே.ஏ. மதியழகன், உடுமலை நாராயக்கவி, கோவை செழியன் முதலியோர்.
![]() |
திருப்பூர் |
இங்கு உற்பத்திசெய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூர் - Tiruppur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருப்பூர், இங்கு, போன்ற, கோவை, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, மூலம், இவர், ஆழியாறு, நிலம், தமிழ்நாட்டுத், அணைக்கட்டு, தகவல்கள், ஏக்கர், உடுமலை, பாசனம், தொழிற்பேட்டைகள், பனியன், | , மோகன், உற்பத்தி, நீர்மின், இடங்களில், பெறுகிறது, அமராவதி, பகுதிகளில், மரங்கள், மரங்களும், information, tiruppur, districts, வளர்கின்றன, பகுதி, பரம்பிக்குளம், சோலையாறு, பொள்ளாச்சி, காடுகள், பெறுவதால், அணைகள்