திருப்பூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருப்பூர் |
பரப்பு : | 5,187 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 2,479,052 (2011) |
எழுத்தறிவு : | 1,760,566 (78.68 %) |
ஆண்கள் : | 1,246,159 |
பெண்கள் : | 1,232,893 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 478 |
வரலாற்றுச் சிறப்பு:
திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இது அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்.
பொது விபரங்கள்
எல்லைகள்:
திருப்பூர் மாவட்டத்தின் வடக்கில் ஈரோடு மாவட்டமும், தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் கரூர், ஈரோடு மாவட்டமும், மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.
வருவாய் நிர்வாகப் பிரிவு
கோட்டங்கள் - 3 (திருப்பூர், உடுமலைப்பேட்டை, தாராபுரம்);
வட்டங்கள் - 7 (திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம்)
வருவாய் கிராமங்கள் - 441 உள்ளாட்சி நிறுவனங்கள்
மாநகராட்சி - 1 (திருப்பூர்/திருப்போரூர்புரம்)
நகரியம் - 7 (காங்கேயம், வெள்ளக்கோயில், பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், வேலம்பாளையம், S.நல்லூர்)
ஊராட்சி ஒன்றியம் - 13
பேரூராட்சி - 17 (அவினாசி, மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம், சாமலாபுரம், சங்கரமநல்லூர், தளி, திருமுருகன்பூண்டி, கன்னிவாடி, குன்னத்தூர், குளத்துப்பாளையம், மூலனூர், ஊத்துக்குளி, முத்தூர், ருத்திராவதி, சின்னக்கம்பாளையம்)
பஞ்சாயத்துக்கள் - 265
சட்டசபை தொகுதிகள் - 8
அவிநாசி, பல்லடம், திருப்பூர், உடுமலைப்பேட்டை,
பாராளுமன்ற தொகுதிகள் - 5 (பகுதியாக)
1. திருப்பூர்
2. கோயம்புத்தூர்
3. பொள்ளாச்சி
4. நீலகிரி
5. ஈரோடு
பள்ளிகள்
தொடக்கப்பள்ளிகள் - 864 ; நடுநிலைப்பள்ளிகள் - 294; உயர்நிலைப்பள்ளிகள் - 96; மேநிலைப்பள்ளிகள் - 87
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூர் - Tiruppur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருப்பூர், உடுமலைப்பேட்டை, பல்லடம், தாராபுரம், tamilnadu, மாவட்டமும், தமிழக, மாவட்டங்கள், அவினாசி, காங்கேயம், ஈரோடு, மாவட்டத்தின், தமிழ்நாட்டுத், மாவட்டம், தகவல்கள், வருவாய், tiruppur, மடத்துக்குளம், தொகுதிகள், | , districts, உருவாக்கப்பட்டது, information, ஆகிய, பிரிவுகளையும், கோயம்புத்தூர், மக்கள்