திருப்பூர் - தமிழக மாவட்டங்கள்
அருள்மிகு திருமுருகாநத சுவாமி கோவில், திருமுருகன் பூண்டி, அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், அவிநாசி. அருள்மிகு திருப்பூர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவில், திருப்பூர். அருள்மிகு ஊத்துகுளி முருகன் கோவில், ஊத்துகுளி. அருள்மிகு சுக்ரீவேஸ்வரா கோயில், ஊத்துகுளி பெரியபாளையம். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், சிவன்மலை அருள்மிகு மாரியம்மன் கோயில், கருவலூர் அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி கோவில், தாராபுரம் நகர் அருள்மிகு விஸ்வேஸ்வரர் வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர் நகர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில், பெருமநல்லூர். அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை.
சுற்றுலா இடங்கள்:
அமராவதி அணைக்கட்டில் முதலைகள் உள்ளன. டாப் ஸ்லீப் பகுதியில் எண்ணற்ற பறவை இனங்களைக் காணலாம். இந்தப் புகலிடத்தைச் சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர் மிகுதியாக வருகின்றனர். இப்புகலிடத்தை யானை மீது அமர்ந்து அல்லது வாகனத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட பழங்குடிகள்:
ஆனை மலையிலுள்ள கோழி கமத்தி, ஆழியார் அணை, சவமலை, பவர்ஹவுஸ், கொல்லத்திப்பாறை போன்ற இடங்களில் மலமலசர் என்ற பழங்குடிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மலையில் வாழ்பவர்கள் மலைமலசர், மலையடிவாரத்தில் வாழ்பவர்கள் பதிமலசர் என்னும் இருபிரிவினர் உள்ளனர். பதிமலசர்கள் ஆனைக்குந்தி, சேத்துமடை, அட்டஹட்டி, கீழ்புனாச்சி, சர்க்கார்பதி முதலிய இடங்களில் வாழ்கிறார்கள்.
காடர்:
ஆனைமலைப்பகுதியில் உள்ள பரமன்கடவு, பன்னிகுழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்று, அயன்குளம், வாகைமலை ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
முதுவர்:
தங்கள் பூர்வீகம் மதுரை என்று சொல்லிக்கொள்கிறார்கள். மற்ற பழங்குடிகளைவிட நாகரீகம் அடைந்தவர்களாக காணப்படுகின்றனர். வாய்மொழி இலக்கியம், இசை ரசிக்கும் இயல்பு போன்ற சிறப்பினைப் பெற்றவர்கள் இவர்கள்.
புலையர்:
ஆனைமலைப்பகுதியில் 2000 குடும்பங்கள் வாழ்கின்றனர். குறிப்பாக
பொள்ளாச்சியிலிருந்து முடீஸ் போகும் வழியில் நீர்வீழ்ச்சி என்ற
இடத்திற்கு அருகில் மலைகளிலும், மலையடிவாரத்திலும், கீழ்ப்பூனாஞ்ஜியிலும்
இவர்கள் வாழுகின்றனர்.
காடு-மலை வளம்:
ஆனை மலையின் உயரம் கடல் மட்டத்திற்குமேல் 2000 அடி. இதன் சிகரங்கள் 4000
அடி உயரத்திலும், உச்சி முகடுகள் 5000 அடி உயரத்திலும் காணப்படுகின்றன.
குச்சிமலை கடல் மட்டத்திலிருந்து 8500 அடி வரை உயர்ந்து நிற்கிறது.
மைக்கேல் பள்ளத்தாக்கின் தெற்கில் குமரிக்கல் மலை காணப்படுகிறது. இது
அஞ்சநாடு பகுதியில் 7000 அடி உயரத்தில் புதுக்கல் என்ற இடத்தில்
காணப்படுகிறது.
வெள்ளியங்கிரிமலை இம்மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில்
நீலகிரி மலையின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இதன் சிகரங்கள் சில
இடங்களில் 5000 அடி உயரத்தில் தென்படுகின்றன.
இம்மாவட்டத்தில் காட்டுவளம் மிகுந்து காணப்படுகிறது. இதன்மூலம் நிறைய
மரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இத்தகைய செறிந்த காடுகள் அவிநாசி,
உடுமலைப்பேட்டை வட்டங்களில் பரவலாகக்
காணப்படுகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
திருப்பூர் - Tiruppur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - அருள்மிகு, திருப்பூர், கோவில், காணப்படுகிறது, இடங்களில், சுவாமி, தமிழக, கோயில், மாவட்டங்கள், tamilnadu, ஊத்துகுளி, காணப்படுகின்றன, வருகின்றனர், அவிநாசி, தமிழ்நாட்டுத், தகவல்கள், மலையின், | , இவர்கள், கடல், சிகரங்கள், உயரத்திலும், உயரத்தில், ஆனைமலைப்பகுதியில், இதன், பகுதியில், காடு, information, districts, tiruppur, நகர், பழங்குடிகள், வாழ்ந்து, போன்ற, சவமலை, வாழ்பவர்கள்