திருப்பூர் - தமிழக மாவட்டங்கள்
கே. பழனிச்சாமி, எஸ். இராமசாமி, க. நாராயணசாமி ஆகிய தொழில் மேதைகளால்
நிட்மேக் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு இத்தொழில் பெரும்
வளர்ச்சி யடைந்துள்ளது. இதற்கான இயந்திரங்கள் கோவையிலேயே
தயாரிக்கப்படுகின்றன. இதன் சார்புத் தொழிலாகச் சலவை தொழிலும்,
அட்டைப்பெட்டிகள் தயாரிப்பதும் நடக்கிறது. இதற்காகவே பல அச்சகங்கள்
நிறுவப்பட்டன. சுமார் 2000 நிறுவனங்கள் பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
கொடி காத்த குமரன் |
அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது.
திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளில் கால் சதவீதம் இங்கிருந்தே நடக்கிறது என்பது பெருஞ்சிறப்பாகும்.
திருப்பூருக்கு மேலும் சிறப்பு - விடுதலைப்போரில் 'கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.
பல்லடம் மாணிக்கம் |
விவசாயமும், கைத்தறியுமே இவ்வூரின் முக்கியதொழில்கள். இங்கு புகையிலை தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, மாதிரிதோல் பதனிடும் நிலையம் ஒன்றை அமைத்து இத்தொழிலுக்கு ஊக்கமளித்து வருகிறது. பல்லடத்து பெருமக்கள் - புல்லாங்குழல் வித்வான், சஞ்சீவராவ், பல்லடம் மாணிக்கம், பல்லடம் முத்துக்குமரன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவிநாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைநகர். அவிநாசி கோவில் புகழ்பெற்றது. வரலாற்று சிறப்பு மிகுந்தது. பெருமளவு பருத்தியும், ஓரளவு கரும்பும் நெல்லும் விளைகிறது. சிறுமுகையில் விஸ்கோஸ் லிமிடெட் என்ற ரெயான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய - இத்தாலி நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இங்கு ஸ்டேபிள் பைபர் தயாராகிறது. 1000 மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
உடுமலைப்பேட்டை:
பழனிமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகிய மலைகளுக்கு ஊடே இருப்பதால் இவ்வூர் உடுமலைப்பேட்டை எனப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 400 மீ உயரத்தில் உள்ளது. இவ்வூரில் உரத்தொழிற்சாலை மின்சார மோட்டார் பம்பு உற்பத்தி, காகித ஆலை ஒன்று, குளுகோஸ் தயாரிக்கும் நிறுவனம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, நுல் ஆலை, பருத்தி அரைக்கும் ஆலை போன்றவை உள்ளன. இயற்கை எழில் மிக்க அமராவதிஅணை இங்கு கட்டப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பாடலாசிரியரும், பகுத்தறிவு பாடல்களை இயற்றியவருமான உடுமலை நாராயணக்கவி இவ்வூரினைச் சார்ந்தவர் என்பது இவ்வூருக்கு மற்றொரு சிறப்பாகும்.
திருமுருக்கன் பூண்டி:
திருப்பூரில் அருகில் உள்ளது இவ்வூர். இது பாடல் பெற்றதலம் ஆகும். இங்கு கல், செம்பு சிலைகள் செய்யும் தொழில் நடைபெறுகிறது. பலவெளி நாடுகளுக்கும் இவ்வூர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிற ஊர்கள்:
போத்தனுர் இரயில்வே தொழிற்சாலை முன்பு இருந்தது. கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் வளர்ச்சியை பொறுத்தே இந்நகரமும் வளருகிறது. புந்தி - உடுமலைக்கு 14 கி-மீ. தொலைவில் உள்ளது. இங்கு நல்லதேன் கிடைக்கும்.
சோமவார்பட்டி - கைத்தறிநெசவு, விவசாயம் சிறப்பாக உள்ளது. சங்கராராமநல்லுர் - கைத்தறி நெசவு, விவசாயம், கோயில் சிறப்பு உள்ள ஊர். திருமூர்த்திகோயில் - 3000 அடி உயரத்தில் உள்ளது. சுற்றுலாத் தலம்.
அன்னுர் - ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாக உள்ளது. கோவில், விவசாயம், கைத்தறி சிறப்பாக நடைபெறுகிறது.
கருத்தாம்பட்டி - கிருஸ்தவ சிறப்பு உள்ள ஊர்
காரமடை - ஊராட்சி ஒன்றியத் தலைநகர், காரமடை தேர், கோவில் சிறப்பு வாய்ந்தது.
கரவலுர் - கோவில் சிறப்பு சிவன், பருமாள் கோவில்கள்
மொண்டிப்பாளையம் - அவிநாசிக்கு 12 மைல் உள்ளது. வெங்கடரமண சாமி கோவில் புகழ்பெற்றது.
சேயூர் - பழைய கோவிலால் புகழ்பெற்றது
துடியலுர் - வாணிபத்தலம்
வெள்ளூர் - வரலாற்று சிறப்புமிக்க ஊர்
மைலேரிப்பாளையம் - பழைய ஜாகிர்
தெலுங்குபாளையம் - எலும்பு முறிவு சிகிச்சைக்குப்புகழ்பெற்றது.
ஆனைமலை - ஆனைமலைப் பகுதி தேயிலை உற்பத்தியின் மூல ஊற்று எனலாம். மத்திய அரசின் தேயிலை ஆய்வுகூடம் உள்ளது.
வால்பாறை - காப்பி, சின்கோனா, ஏலக்காய், போன்றவை இங்கு மிகுதியாக விளைகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூர் - Tiruppur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, சிறப்பு, இங்கு, திருப்பூர், கோவில், தமிழக, பல்லடம், tamilnadu, மாவட்டங்கள், அவிநாசி, நடைபெறுகிறது, இவ்வூர், புகழ்பெற்றது, ஏற்றுமதி, ஊராட்சி, ஒன்றியத், கைத்தறி, வருகிறது, விவசாயம், தகவல்கள், தமிழ்நாட்டுத், தொழில், காரமடை, உள்ள, தலைநகர், | , தேயிலை, சிறப்பாக, பழைய, வரலாற்று, உயரத்தில், அருகில், tiruppur, சிலைகள், இருப்பதால், தொழிற்சாலை, உடுமலைப்பேட்டை, ஆனைமலை, போன்றவை, செய்யும், நடக்கிறது, கொடி, காத்த, குமரன், தொழிலும், வளர்ச்சி, districts, information, ஆகிய, பெரும், நெசவு, இந்திய, திருப்பூருக்கு, மேலும், என்பது, ஆகும், தலைமையிடமாக, திருப்பூரில், காதி, நிறுவனம், செய்யப்படும், தயாரிக்கும், மாணிக்கம்