திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
ராமாபுரம் :
நந்தம்பாக்கத்தை அடுத்த இவ்வூர் மிகச்சிறிய கிராமம். புகழ்பெற்ற நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இல்லம் இங்கு அமைந்துள்ளது.
தரமணி :
வளர்ந்து வரும் தொழிற்பேட்டைகளில் இதுவும் ஒன்று. சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள இவ்வூரில் பாடநூல் நிறுவனக் கிடங்குகள் அமைந்துள்ளன. இங்கு உள்ள எம்.ஜி.ஆர் திரைப்பட நகரை காண நாள்தோறும் சுற்றுலாபயணிகள் கூட்டம் வருகிறது. ரேடியோ, தொலைக்காட்சி, டேப்ரிக்கார்டர், கால்குலேட்டர், ஸ்டைபிலைசர் போன்ற மின் விசைப் பொருட்கள் தயாரிக்கும் பல நிறுவனங்கள் இங்குச் செயலாற்றி வருகின்றன.
சைதாப்பேட்டை :
ஆற்காடு நவாபுகளின் ஆட்சிக் காலத்தில், சுல்தான் பதவி வகித்தவர்கள் வாழ்ந்த இப்பகுதி சுல்தான் பேட்டை என்று அழைக்கப்பட்டு, இப்போது சைதாப்பேட்டை என மருவி வழங்கப்படுகிறது. இது வட்டத் தலைநகர். இங்குள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி இரண்டும் ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்டவை. இங்கு காருணீஸ்வரர் ஆலயம் உள்ளது.
சின்னமலை :
லிட்டில் மவுண்ட் என்னும் இப்பகுதி சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ளது. இங்கு பழங்கால கிறித்துவ ஆலயம் சிறந்து விளங்குகிறது. யேசுவின் சீடர்களின் ஒருவரான புனித தோமையார் இங்கு பகைவர்களிடமிருந்து ஒளிந்துகொண்டதாகக் கூறப்படும் குகை உள்ளது.
திருவொற்றியூர் :
வாணிக நிலையங்களும், தொழிற்சாலைகள் பலவும் நிரம்பியது. மக்கள் நெருக்கம் அதிகம். மாட்டு வியாபாரம் இங்குச் சிறப்பாக நடக்கிறது. இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து பலரும் இங்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பட்டினத்தார் சமாதியும் இங்குள்ளது. கே.சி.பி எனும் சிமெண்ட் மற்றும் கரும்பு ஆலைகளுக்கான இயந்திரங்களையும், உதிரிபாகங்களையும் செய்யும் தொழிற்சாலை இங்குள்ளது. மேலும் பல தொழிற்சாலைகள் இங்கு இருக்கின்றன.
போரூர் :
ஹட்கோ தொழில் நிறுவனமும், டபிள்யூ.எஸ்.இன்சுலேட்டர் நிறுவனமும், அச்சடிக்க உதவும் மை தயாரிக்கும் ரெயின்போ நிறுவனமும் இங்குள்ளன.
வேளச்சேரி :
சைதாப்பேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் வேளச்சேரி உள்ளது. இது வளர்ந்து வரும் தொழில் பகுதியாகும். புகழ்பெற்ற கிளாக்ஸோ, ரேட்டகாஸ் பிரெட் நிறுவனங்களும், சிட்டாடல் போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், பிளாஸ்டிக், பாலித்தீன் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறைந்த ஊர். சிறந்த இரு பெரிய அச்சகங்களும் உள்ளன. பல்லவர் காலத்து சிவன் கோயில் ஒன்று சற்றுச் சீரழிந்த நிலையில் உள்ளது. வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையில் இன்னும் எண்ணற்ற தொழிலகங்கள் உள்ளன.
அலமாதி :
பால்மாற்றப் பசுக்களுக்குச் சத்துணவு ஊட்டி அவற்றைப் பேணும் ஆனிலையம் இவ்வூரில் இருக்கிறது.
ஆரணி :
சென்னையிலிருந்து இரு மைல் தொலைவில் உள்ளது. லுங்கி நெசவுக்கும், நெல், வாழை விளைச்சலுக்கும் பெயர் பெற்ற ஊர்.
திருப்பாலைவனம் :
மீஞ்சூர் கடற்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயிலில் 71 கல்வெட்டுகள் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, உள்ளது, தயாரிக்கும், திருவள்ளூர், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, நிறுவனமும், கல்லூரி, வேளச்சேரி, தமிழ்நாட்டுத், தொலைவில், தகவல்கள், நிறுவனங்களும், உடற்பயிற்சிக், | , இப்பகுதி, சிவன், ஆலயம், இங்குள்ளது, தொழிற்சாலைகள், தொழில், சுல்தான், போன்ற, வளர்ந்து, வரும், புகழ்பெற்ற, information, thiruvallur, districts, ஒன்று, சைதாப்பேட்டைக்கு, இங்குச், சைதாப்பேட்டை, இவ்வூரில், உள்ள, அருகில், காலத்தில்