திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
கம்மவார்பாளையம் :
ஆந்திராவிலிருந்து வந்த கம்மவர் (உழவர்கள்) குடியேறியதால் கம்மவார் பாளையம் என்று பெயர் பெற்றது.
நந்தியம்பாக்கம் :
நந்திவர்மன் என்ற பல்லவன் நினைவாக உண்டாக்கப் பெற்ற ஊர்.
வளூர் :
சங்ககால வேற்குடி சிற்றரசர்களால் உண்டான ஊர்
கரிமணல் :
இது பழவேற்காடு தீவிலுள்ள கடற்கரைச் சிற்றுர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் வந்த ஐரோப்பியர்கள் கடலைக் கடந்து அடைந்த முதல் ஊர் இதுவேயாகும்.
சேலை :
திருவள்ளூருக்கும் கடம்பத்தூருக்கும் இடைப்பட்ட ஊராகும். சேலை சகாதேவ முதலியார் என்ற சிறந்த தமிழ்புலவர் இவ்வூரினர் ஆவார்.
திருப்பாசூர் :
திருவள்ளூரிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல், மணிலா, கேழ்வரகு முதலியன மிகுதியாக விளையும் ஊர். கிழக்கிந்திய கம்பெனியாரின் முக்கிய ராணுவத் தளமாக விளங்கியது. கத்தரிக்காயிற்குப் பெயர் பெற்ற ஊர். சோழ, விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் பல இவ்வூர் சிவன் கோயிலில் காணப்படுகின்றன.
பெரியபாளையம் :
இவ்வூர் மாரியம்மன் கோயில் பிரசித்திப் பெற்றது. ஆடி மாதத்தில் சிறப்பாக உற்சவங்கள் நடைபெறும்.
மப்பேடு :
இவ்வூரில் தோன்றிய அரிய நாயக முதலியார் 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து நாய்க்க மன்னர் நால்வரிடம் பிரதானியாகவும், தளவாயாகவும் இருந்து பாளையங்களை அமைத்தும், மதுரை நகருக்கு கோட்டை கட்டியும், பல கோயில்களுக்குத் திருப்பணி செய்தும் புகழ் பெற்றவர்.
வில்லிவாக்கம் :
சென்னை-அரக்கோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க காலத்தில் வில்லியர் என்ற கூட்டத்தினர் மிகுதியாக இங்கு வாழ்ந்ததால், இப்பெயர் ஏற்பட்டது என்பர். தினந்தோறும் இங்கு காய்கறிச் சந்தை நடைபெறுகிறது.
புத்தவேடு :
சென்னையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றத்தூர் வழியாகச் செல்ல வேண்டும். கெளதம புத்தர் ஞானம் எய்திய போது இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
மணப்பாக்கம் :
சரியான பெயர் மணற்பாக்கம். இவ்வூர் மணற்பாங்கானது.
சுங்குவார் சத்திரம் :
சுங்குவார் என்ற வைசிய சமூகத்தினர் ஆங்கிலேய வணிகர்களிடம் தொழில் தொடர்பு கொண்டு செல்வாக்குடன் இருந்தனர். இவர்களுள் ஒருவரான சுங்குராமச் செட்டி பெயரால் சென்னையில் ஒரு தெரு உள்ளது. இவ்வூரில் பஸ், லாரி போக்குவரத்தால் வியாபாரம் சிறப்பாக நடைபெறுகிறது.
இராமகிருஷ்ணராசுப்பேட்டை :
இவ்வூரில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மிகுதி. இவற்றின் மூலம் நெய்யப்படும் துணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், அமொரிக்காவிற்கும் ஏற்றுமதியாகின்றன.
பள்ளிப்பட்டு :
ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்ட பகுதியில் மிகவும் பிற்பட்ட பகுதியாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - tamilnadu, உள்ளது, மாவட்டங்கள், தமிழக, திருவள்ளூர், இங்கு, இவ்வூரில், பெயர், தமிழ்நாட்டுத், தொலைவில், இவ்வூர், தகவல்கள், மிகுதியாக, நடைபெறுகிறது, | , சுங்குவார், சிறப்பாக, பெற்ற, information, districts, thiruvallur, வந்த, பெற்றது, சேலை, நூற்றாண்டுகளில், முதலியார்