திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
உத்திரமேரூர் :
களப்பிர அரசன் ஒருவனது பெயரால் இவ்வூர் உத்திமேரூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏரியும், கோட்டையும் சோழ அரசர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப் பட்டவை. காஞ்சியிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கைத்தறி நெசவு பெருமளவில் நடைபெறுகிறது.
ஆவடி :
ஆங்கிலேயர்கள் காலத்தில் படைத்தளமாக அமைக்கப்பட்டது. நேரு தலைமையில் இங்கு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. தானியங்கி போர் ஊர்தி தொழிற்சாலை, படையுடை தயாரிப்பு தொழிற்சாலை இன்னும் பலத் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர்.
பழவேற்காடு :
ஐரோப்பியர்களால் புலிகாட் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் டச்சுக்காரர்களின் வாணிப இடமாக இருந்தது. ஆங்கில-டச்சுப் போர்கள் பல இங்கு நடந்துள்ளன. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது.
பூண்டி :
சென்னை நகரத்தில் பயன்பட்டு வரும் நீர்த்தேக்கம் பூண்டியில்தான் உள்ளது. இது பூண்டி ஏரி என்றும், சத்தியமூர்த்தி சாகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அரசாங்க நீர்ப்பாசன ஆராய்ச்சி நிலையம் உள்ளது. சென்னையின் முதல் ஷெரீப்பும், கல்லூரி பேராசிரியரும், சொற்பொழிவாளரும், கச்சித் கலம்பகத்தை இயற்றிவருமான அரங்கநாத முதலியார் இங்கு பிறந்தவராவார்.
பூவிருந்தவல்லி :
பூலிருந்தவல்லி என்பதே பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆங்கிலேயரின் படைத்தளம் இருந்தது. இவ்வூரிலிருந்து சென்னைக் கடற்கரைக்குச் செல்லும். பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆங்கிலேயர் அமைத்தனர். திருக்கச் சிரம்பியார் என்ற வைணவப் பெரியார் இவ்வூரில் பிறந்தவராவார். இங்கு குருடர் பள்ளியும், நீதிமன்றமும் உள்ளன. வயல்கள் சூழ்ந்த ஊர்.
செங்குன்றம் :
சென்னையிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ளது இவ்வூர். இதன் பழைய பெயர் புழல் என்பதாகும். இது ஒருகாலத்தில் சமணர் மிகுதியாக வாழ்ந்த இடமாகும். பல பிரபல தொழில் நிறுவனங்கள் இவ்வூரில் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் :
திரு எவ்வுள்ளூர் என்னும் ஆதிப்பெயரே திருவள்ளூர் என மாறி வழங்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோவிலில் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு காணப்படுகின்றது. பெரிய குப்பம் என்ற பகுதியில் அரசாங்கப் பெருநோய் மருத்துவமனை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவுக்கு மக்கள் திரளாகக் கூடுவர்.
பறங்கிமலை :
பறங்கிமலை |
நந்தம்பாக்கம் :
பறங்கிமலையை அடுத்துள்ள இவ்வூரில் மத்திய அரசின் மருத்துவ அறுவை சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதற்குப் பின்புறம் இந்தியா செமணட் நிறுவனத்தாரின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தளவாட வார்ப்புத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இரயில் எஞ்சின்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் பெரும்பாலும் இங்குத் தயாராகின்றன. இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த இந்திய, ஆங்கிவப் போர் வீரர்களின் நினைவுச் சின்னம் இங்குள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, திருவள்ளூர், உள்ளது, tamilnadu, தொழிற்சாலை, தமிழக, மாவட்டங்கள், தகவல்கள், பறங்கிமலை, இவ்வூரில், காலத்தில், தமிழ்நாட்டுத், அழைக்கப்படுகிறது, இவ்வூர், இங்குத், உதிரிபாகங்கள், வாழ்ந்த, தங்கி, | , அரசின், பெயர், அமைந்துள்ளது, தயாரிக்கும், பின்புறம், மத்திய, பூண்டி, படைத்தளமாக, இங்குள்ள, இந்தியா, information, போர், thiruvallur, பிறந்தவராவார், என்றும், districts, இடமாக, பூந்தமல்லி