திருவள்ளூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | திருவள்ளூர் |
பரப்பு : | 3,394 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,728,104 (2011) |
எழுத்தறிவு : | 2,791,721 (84.03 %) |
ஆண்கள் : | 1,876,062 |
பெண்கள் : | 1,852,042 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 1,098 |
வரலாறு:
1968 ஜூலை ஆறாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப் பட்டது. பிறகு 1996 இல் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் திருவள்ளூர் மாவட்டம் என்றும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தோடு பலகாலம் சேர்ந்தே இருந்ததால். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு திருவள்ளுவர் மாவட்டத்திற்கும் பொருந்தும்.
(காண்க: காஞ்சிபுரம் மாவட்டம்)
திருத்தணி மீட்பு :
சென்னை ராஜதானி என்பது தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் இவைகளை உள்ளடக்கியப் பகுதியாகத் திகழ்ந்தது. இந்தக் கூட்டை விரும்பாத ஆந்திரர்கள் மொழிவழி மாகாணம் அமைக்கக் கோரி போராடத் தொடங்கினர். தெலுங்குப் போராளிகள் சென்னை, திருத்தணி, சித்தூர் இவைகளை அதிகம் தெலுங்கு பேசுவோர் பகுதி என்று அறிவித்து, இவற்றை ஆந்திரத்துடன் சேர்க்கவேண்டும் என்று கோரிய போதுதான் தமிழகம் விழித்துக் கொண்டது. தமிழகத்தின் வட எல்லை திருப்பதி வரை என்பதைச் சான்றுகளுடன் கூறி மறுப்புத் தெரிவிக்கவே, சென்னை தமிழகத்துடன் இணைந்தால் கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று ஆந்திரர்கள் வற்புறத்தினர். இதற்காக நேரு அரசால் அமைக்கப்பட்ட வாஞ்சுக் கமிட்டியும் இதையே வற்புறுத்தியது. இதை எதிர்த்து திருத்தணியில் தமிழ்ப்பெரியார் மங்கலங்கிழார் தலைமையில் வடக்கெல்லைப் போராட்டம் நடந்தது. வடக்கெல்லைப் போராட்டம் சென்னையையும் திருத்தணியையும் தமிழகத்திற்கு மீட்டுத் தந்தது. ஆந்திராவிற்கு நஷ்ட ஈடும் தரப்படவில்லை.
வழிபாட்டுத் தலங்கள்
திருத்தணிகை மலை :
![]() |
திருத்தணிகை மலை |
கூவம் :
திருவிற்கோலம் என்னும் பெயரையும் கொண்ட இவ்வூர் இறைவன் திரிபுராந்தகர் தீண்டாத் திருமேணியாவார். அதிக மழை பெய்வதாய் இருந்தால் இறைவன் மீது வெண்மை படரும். போர் வருவதாய் இருந்தால் சிவப்பு நிறம் படரும். இறைவன் கையில் வில்லுடன் இருக்கிறார். கடம்பத்தூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரை சென்னையிலிருந்து பேருந்திலும் சென்றடையலாம்.
தக்கோலம் :
இவ்வூர்க் கோயிலில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் நீர் வழிந்துக் கொண்டிருப்பதால் இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தென்முகக் கடவுள் தெட்சிணாமூர்த்தி வடிவம் தனிச்சிறப்புடையது. பெரியபுராணத்தில் இவ்வூர் கலிகை மாநகர் என்று குறிக்கப்படுகிறது. செங்கற்பட்டு-அரக்கோணம் இருப்புப் பாதையில் உள்ள தக்கோலம் என்னும் நிலையத்திலிருந்து கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரை, திருவாலங்காடு புகைவண்டி நிலையம் வழியாகவும் சென்றடையலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவள்ளூர் - Thiruvallur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திருவள்ளூர், மாவட்டம், என்னும், உள்ள, காஞ்சிபுரம், தமிழக, tamilnadu, மாவட்டங்கள், தொலைவில், சென்னை, இறைவன், என்றும், போர், மக்கள், தகவல்கள், முருகன், தமிழ்நாட்டுத், இவ்வூர், இங்குள்ள, | , நிலையத்திலிருந்து, இவ்வூரை, சென்றடையலாம், தக்கோலம், புகைவண்டி, படரும், இருந்தால், வடக்கெல்லைப், வரலாறு, செங்கல்பட்டு, information, districts, thiruvallur, திருத்தணி, இவைகளை, திருத்தணிகை, சென்னையிலிருந்து, போராட்டம், நஷ்ட, ஆந்திரர்கள், கொண்ட