தேனி - தமிழக மாவட்டங்கள்
எழுமலை :
ஆண்டிப்பட்டி மலையடிவாரத்தில், திருமங்கலத்துக்கு வடக்கே 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திங்கள் கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சாப்டூர் :
1895 இல் இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்தில் சேர்க்கப் பட்டு, தற்போது தேனி மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் கேரள மாநில எல்லை ஆரம்பிக்கிறது. உல்லாசப் பயணிகளுக்கு உவப்பான இடம். வேளாண்மையிலும் சிறந்துள்ளது. சாப்டூர் என்பது தெலுங்குச் சொல். இதற்கு ஊற்றின் மீது விரிக்கப்பட்ட பாய் என்று பொருளாகும்.
பெரியகுளம் நகரம் :
வராக நதிக்கரையில் அமைந்த இவ்வூரை, வடகரை என்றும் தென்கரை என்றும் அழைக்கின்றனர். கொடைக்கானல் மலையின் அடிவாரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் அரசினர் பழப்பண்ணை, கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, நகராண்மைக் கழகம், கோட்ட ஆட்சியர், வட்ட ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியன உள்ளன.
தேனி நகரம் :
தேனி |
இந்நகரத்தில ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுச் சந்தையும், வியாழக்கிழமைகளில் ஊர்ச் சந்தையும் கூடுகின்றன. நுற்பு நெசவாலைகள், பருத்தி, நெல் அரவை ஆலைகள், எண்ணெய் ஆட்டும் ஆலைகள், கடலை உடைக்கும் ஆலைகள், சிமெண்டு தூண்கள் செய்யும் தொழிலகம், வங்கிகள், தரகு மண்டிகள், சுங்கத்துறை அலுவலகம் ஆகியன இந்நகரில் அமைந்துள்ளன.
ஆண்டிப்பாடி :
பெரியகுளத்திலிருந்து 16கி.மீ. தொலைவிலும், மதுரை-போடிநாயக்கனுர் இரயில் பாதையிலும் அமைந்துள்ளது. பாண்டியர்களால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இங்குள்ளது. தமிழ்புத்தாண்டு இங்கு பெரியத் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது. நல்ல மருது மர ஊற்றுகளில் சிறந்த நீர் சுரக்கிறது.
வேலப்பர் கோவில் :
இச்சிற்றுர் ஆண்டிப்பட்டிக்குத் தெற்கே சுமார் 10 கல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மலைச் சரிவில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பூசாரியாக மலைவாழ் சாதியினரான பளிஞர் ஒருவர் பணிபுரிகிறார்.
வருஷநாடு :
ஆண்டிப்பட்டி மலைத் தொடருக்கும் மேக மலைத் தொடருக்கும் இடையே அதற்கு வடக்காக உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே வருஷநாடு எனப்படுகிறது. பள்ளத்தாக்கின் உயர்ந்த பகுதி கோட்டைமலை. இம்மலையின் உயரம் 6,617 அடி. மூங்கிலாறு, சிற்றாறு, வைகை முதலியன இப்பள்ளத்தாக்கில் ஓடி வருகின்றன. வருஷநாடு என்றால் மழை மிகுந்த பகுதி என்று பொருள். இங்கு கந்தகம், மண்ணெண்ணெய் முதலியன கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேனி - Theni - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தேனி, அமைந்துள்ளது, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, இவ்வூர், வருஷநாடு, மதுரை, நகரம், நீர், உள்ளது, ஆலைகள், தொலைவில், தமிழ்நாட்டுத், வைகை, தகவல்கள், இங்கு, மின், மஞ்சளாறு, பெரியாறு, நிலையம், கோவில், முதலியன, | , பகுதி, தொடருக்கும், இங்கிருந்து, மலைத், சந்தையும், ஆட்சியர், கிழமைகளில், சந்தை, ஆண்டிப்பட்டி, information, theni, districts, சாப்டூர், மாவட்டத்தில், பகுதியே, போடிநாயக்கனுர், அல்லி, ஆகியன, என்றும், கொடைக்கானல், இரயில்