தேனி - தமிழக மாவட்டங்கள்
வீரபாண்டி :
முல்லையாற்றில் கரையில், தேனியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது. கண்ணீசுரர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் ஊருக்கு பெருமை சேர்க்கின்றன.
போடிநாயக்கனுர் :
இந்நகரம் முப்புறமும் உயர்தோங்கிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து 90கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. 1916-இல் இங்கு நகராண்மைக் கழகம் ஏற்பட்டது. ஏலக்காய் விளைச்சலிலும், ஏலக்காய் வணிகத்திலும் இந்நகர் பெருமை பெற்றது. ஊத்தம்பாறை ஆறு, கூவலங்காறு, கொட்டக்குடி ஆறு, வலசை ஆறு, முத்துக்கோம்பையாறு என்றும் ஐந்து ஆறுகள் பாய்வதால் பஞ்சநதி என்றும் இவ்வூருக்குப் பெயர் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இலவம் பஞ்சு உற்பத்தியில் போடிநாயக்கனுர் முன்னணியில் உள்ளது. இவ்வூரில் ஏலக்காய் பயிரிடுவோர் சங்கம் சிறப்பாகச் செயல்படுகிறது. தேவிகுளம் மலையில் விளையும் பொருட்களை இறக்குமதி செய்யவும், தேவையானப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இச்சங்கம் உதவுகிறது. சென்னைத் துறைமுகத்திற்கு தேயிலைப் பெட்டிகளை அனுப்புவதற்காகவே மதுரை -போடிநாயக்கனுர் இரயில்பாதை அமைக்கப்பட்டது. அக்காள் மலை, தங்கை மலை, மரக்கலராயர் மலை இம்மூன்றும் பெளர்ணமி நாளில் கண்கொள்ளாக் காட்சியாகக் இருக்கும்.
கம்பம் :
கம்பம் |
கம்பத்திலிருந்து குமிளி என்னுமிடம் 6கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குச் செல்லும் மலை வழியில் இருபுறமும் இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழலாம். வண்ணத் துப்பட்டிகள் கம்பத்தில் தயாரிக்கப்ட்டு தமிழகத்தின் பல பகுதி களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இவ்வூர்க் கோவில்களுள் கம்பராகவப் பெருமாள் கோயில் குறிப்பிடத்தக்கது. கம்பத்தில் முஸ்லீம்கள் குறிப்பிட்டத் தொகை யினராக உள்ளனர். ஆற்காடு நவாப் காலத்தில் கட்டப்பட்ட வாவேர் பள்ளிவாசலும், இராஜபாளையத்தார் கட்டிய மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலும் இங்குள்ளன. இங்கு அரபு பள்ளி ஒன்றும் நடைபெறுகிறது.
சின்னமனுர் :
இவ்வூர் மூன்றாம் நிலை நகராண்மைக் கழகமாக விளங்குகிறது. பெரிய குளத்திலிருந்து 35கி.மீ. தொலைவில் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு பேருந்துப் போக்குவரத்து மிகுதி. அருகிலுள்ள இரயில் நிலையம் தேனி. சின்னமனுரில் நெல்வயல் கள், தென்னந்தோப்புகள் செழித்துள்ளன. எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. தேயிலை முதலிய தோட்டப் பொருள்கள் மிகுதியாக வெளியூர்களுக்கு அனுப்பப் படுகின்றன. முதல் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட கன்னிகா பரமேசுவரி கோவில் உள்ளது. 9,10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பூலா நந்தீசுவரர் கோவிலும் இருக்கிறது. வரலாற்று அறிஞர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடும் சின்னமனுர் செப்பேடுகள் இந்நகரில் கிடைத்தவையே. இவற்றிலிருந்து அரிகேசன் முதல் இரண்டாம் நரசிம்மன் வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களைப் பற்றி அறிய முடிந்தது.
வைவேவீஸ் நகரியம் :
1964 ஆம் ஆண்டு இந்நகரியம் அமைக்கப்பட்டது. உத்தமப்பாளையம் வட்டத்தில் 5100 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் அமைந்து இயற்கை வளமும், சுருளியாறு அணைக் கட்டுப் பகுதியும் உடையது. இதன் மொத்தப்பரப்பு 10,000 ஏக்கர். 1947ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்தனர். தோட்டப் பணியாளர்களுக்காக 1400 வீடுகள் கட்டப்பட்டன. மிகப்பெரிய தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டும், ஒரு பணிமனையும் உள்ளன. மொத்தம் இங்குள்ள ஆறு தோட்டங்களும் தி மதராஸ் டீ எஸ்டேட் (பி) லிட் என்னும் கம்பெனிக்குச் சொந்தமானது. இங்கு மாரிக்காலத்தில் மழைக்கும், பனிக்காலத்தில் பனிக்கும் குறைவில்லை. சுமார் 7000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். மருத்துவமனை, பால்பண்ணை, கால்நடை மருந்தகம், தங்கும் விடுதி, சினிமா தியேட்டர் முதலியனவும் உள்ளன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேனி - Theni - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இங்கு, தேனி, தொலைவில், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, போடிநாயக்கனுர், பெரிய, கட்டப்பட்ட, கோவிலும், ஏலக்காய், நகராண்மைக், தகவல்கள், தமிழ்நாட்டுத், theni, கம்பத்தில், நீர், பெரியாற்றின், பள்ளிவாசலும், சின்னமனுர், தோட்டப், | , நிலையம், தேயிலைத், districts, என்றும், information, இவ்வூர், கரையில், பொருட்களை, செய்யவும், பெருமை, கம்பம், அமைக்கப்பட்டது, விளங்குகிறது