தேனி - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | தேனி நகரம் |
பரப்பு : | 2,868 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,245,899 (2011) |
எழுத்தறிவு : | 870,080 (77.26 %) |
ஆண்கள் : | 625,683 |
பெண்கள் : | 620,216 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 434 |
வரலாறு:
1996-இல் தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இது மதுரை மாவட்டத் துடன் பலகாலம் இணைந்திருந்ததால், மதுரை மாவட்டத்தின் வரலாறு தேனி மாவட்டத் திற்கும் பொருந்தும் (காண்க : மதுரை மாவட்டம்)
எல்லைகள் :
வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும்
தேனிமாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
ஒன்றியங்கள் :
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, தேனி, போடி நாயக்கனுர், சின்னமனுர், உத்தமப்பாளையம், கம்பம், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை.
நகரங்கள் :
கம்பம், சின்னமனுர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனுர்.
சுற்றுலாதலங்கள் :
இம்மாவட்டத்தில் வைகை அணையும், சுருளி நீர்வீழ்ச்சியும் சுற்றுலாத் தலங்களாகும்.
வைகை அணை :
வைகை அணை |
சுருளி நீர்வீழ்ச்சி |
தேக்கடி செல்லும் சாலையில், கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவில் சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுருளி நீர்வீழ்ச்சியில் 50 அடி கீழேயும் 20 அடியிலும் இரண்டும் தட்டுகளாய் நீர் கொட்டுகிறது. சிறிதும் வற்றாது ஆண்டு முழுவதும் நீர் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியும், அங்கு கட்டப்பட்டுள்ள அணையும் கண்களுக்கு விருந்தளிப்பதாய் கவினுற அமைந்துள்ளன. குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.
முக்கிய ஊர்கள் :
உசிலம்பட்டி :
மதுரையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் போடிநாயக்கனுர் இரயில் பாதையில் உள்ளது. முக்குலத்தோர் செல்வாக்கு மிகுந்த இச்சிறு நகரம் சிறந்த வணிகத் தலமாகும். கோட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமும், ஒரு கல்லூரியும் அமைந்துள்ளன. சிறு தொழில்கள்
பெருகியுள்ளன.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேனி - Theni - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தேனி, வைகை, சுருளி, மதுரை, நீர், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், தொலைவில், பெரியகுளம், தமிழ்நாட்டுத், தகவல்கள், மாவட்டத்தையும், நீர்வீழ்ச்சி, நீர்வீழ்ச்சியும், மதுரையிலிருந்து, சுற்றுலாத், ரூபாய், தலமாகும், | , அமைந்துள்ளன, சிறந்த, அணையும், அணையின், உசிலம்பட்டி, நகரம், பரப்பு, information, districts, theni, மக்கள், வரலாறு, சின்னமனுர், கம்பம், கேரள, மாவட்டத், மாவட்டம், போடிநாயக்கனுர்