தேனி - தமிழக மாவட்டங்கள்
உத்தமப்பாளையம் :
இது கம்பம் பள்ளத்தாக்கில் உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதி முஸ்லீம்கள். முல்லை யாற்றின் பெருவளத்தால் எங்கும் பசுமை நிறைந்து காணப்படுகிறது. சற்றுத் தொலை வில் சுருளி அருவி உள்ளது. மதுரைச் சீமையில் ஏற்பட்ட முதல் பாளையமாகையால் இந்த ஊரினர் இதைப் பாளையம் என்றே சுருக்கி அழைப்பர். சர்.பி.டி. ராசன், கருத்த மீரா ராவுத்தர், ஹாஜி முகமது மீரான், வள்ளல் மக்கா ராவுத்தர், வள்ளல் மீர் முகமது ராவுத்தர் அனைவரும் இவ்வூரினரே. கருத்தராவுத்தர் நிறுவிய கல்லூரி ஒன்று இங் குள்ளது.
தேவாரம் :
உத்தமபாளையத்துக்கு வடமேற்கே 11கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலக்காய் இங்கு நிறைய விளைகிறது. ஆனி தொடங்கி தீபாவளி வரை நல்ல சாரல் உள்ளதால், இங்கு
வாழ்வது இனியதாய் இருக்கிறது.
கோம்பை :
உத்தமப்பாளையத்திற்கு வடமேற்கே 6கி.மீ. தொலைவில், மலையடி வாரத்தில் இயற்கை எழில் சூழ இவ்வூர் விளங்குகிறது. நன்செய், புன்செய் பயிர்கள் தவிர ஏலக்காய் வேளாண்மையும் மிகுதி. மலையடி வாரத்தில் அரங்கநாதர் கோவிலும், ஊருக்குள் திருமலைராயப் பெருமான் கோவிலும் உள்ளன. வைகாசி விசாகத் திருவிழா பெரிய விழாவாக நடைபெறுகிறது. இப்பகுதியில் கோம்பை நாய் என்னும் ஒரு வகை நாய் இனம் புகழ் பெற்று விளங்கியது.
கூடலூர் :
இது ஒரு பேரூராட்சி. பெரியாற்றிலிருந்து கூடலூருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது. காப்பிலிக் கவுண்டர், குறும்பக் கவுண்டர், மூணுவளைவிக் கவூண்டர், அலுப்பக் கவுண்டர் எனப்படும் கவுண்டர்கள் வாழுகின்றனர். கேப்பை, சாமை, காணம் வேளாண்மை நடைபெறுகிறது. இது திண்டுக்கல் சீமையிலும், திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியிலும் இருந்துள்ளது. கூடலழகள் என்ற இறைவனின் திருப்பெயரே கூடலூரானது.
சுருளிப்பட்டி :
கம்பத்திலிருந்து 10கி.மீ. தொலைவிலுள்ள இப்பகுதிக் காடுகளில் தேக்குமரம் நிறைய விளைகிறது. சுருளிமலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் நீர்வீழ்ச்சியும் உள்ளன. சுருளிமலை ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்த மலையாகும்.
காமயக்கவுண்டன்பட்டி :
கம்பத்திலிருந்து 4கி.மீ. தொலைவிலும், சுருளிமலையிலிருந்து 10கி.மீ. தொலைவிலும் உள்ளது. பெரியாற்றுப் பாசனத்தால் இவ்வூர் வளம் பெறுகிறது. தமிழ்நாட்டில் திராட்சைப்பழச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது. இந்த ஊர் நிலத்து மண் செக்கச் சிவந்து இருக்கும். கடலை இம்மண்ணில் செழிப்பாக விளைகிறது. புளியும், தென்னையும், மாவும், பாலாவும் இங்கு செழித்து வளர்கின்றன. காமயக்கவுண்டன்பட்டி, மதுரை மாநகரின் அமைப்பைக் கொண்டுத் திகழ்கிறது. தேரோடும் அகன்றத் தெருக்கள் உள்ளன. அருகிலுள்ள வண்ணாத்திப்பாறை என்னும் ஊரில் சந்தன மரங்கள் மிகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேனி - Theni - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தேனி, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, ராவுத்தர், கவுண்டர், விளைகிறது, கோவிலும், இங்கு, தமிழ்நாட்டுத், தகவல்கள், என்னும், நாய், நடைபெறுகிறது, districts, | , theni, காமயக்கவுண்டன்பட்டி, 10கி, கம்பத்திலிருந்து, மிகுதி, தொலைவிலும், வாரத்தில், தொலைவில், வடமேற்கே, வள்ளல், முகமது, ஏலக்காய், நிறைய, information, மலையடி, கோம்பை, இவ்வூர்