சேலம் - தமிழக மாவட்டங்கள்
தாரமங்கலம்:
சேலத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்குள்ள 'கைலாசநாதர் கோயில்' கெட்டி முதலியார்கள் என்று கூறப்படும் சிற்றரசரால் கட்டப்பட்டது. ஊரின் நடுவே கோயில் மேற்கு நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட இராசகோபுரத்தின் ஏழு கலசங்களும், சுமார் 375 சுதைச் சிற்பங்களும் அமைந்து விளங்குகின்றன. திருக்கோயிலினுள்ளே முன் மண்டபத்து எட்டுத் தூண்கள் சிற்பக்கலை வடிவங்களாகவே திகழ்கின்றன. முதல் தூணும், கடைசித் தூணும் தளர்ந்து வளைந்துள்ளவை போன்று அமைக்கப்பெற்றுள்ளன.
தாரமங்கலம் |
தூண்களில் யாழி மீதும், இரு குதிரைகள் மீதும் வீரர்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் வாயில் கல் உருண்டை உள்ளது. ஆனால் அதனுள் கை நுழையாது; விரல்கள் செல்லும் இடைவெளி உண்டு. அதன் மூலம் சிற்பி கல்லுருண்டையைக் கடைந்திருக்கிறான்.
கல்சங்கிலிகள்:
மகா மண்டபத்தின் மேல் தளத்திலும், தூண்களின் போதிகைகளினின்றும் சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லாலாகிய வளையங்கள் மேல்தளக் கல்லினின்றும் வெட்டப்பட்டுத் தொங்குகின்றன.
மண்டப சுவர்களில் மீன், ஆமை, முதலையின் வடிவங்கள் கல்லோவியங்கள் போல வடிக்கப்பட்டுள்ளன. இதுபோலவே சூழலும் கல் தாமரை மலர், ரதி-மன்மதன் போன்ற சிற்பங்களை வேறெங்கும் காண முடியாது. இங்குள்ள இரண்டு தூண்களில் வாலி வதத்தை உருவாக்கி இருக்கிறான் சிற்பி. இராமன் ஒரு தூண் பக்கத்திலிருந்து வாலியை நோக்கி அம்பு விடுகிறான். வாலி ஒளிகிறான். ஆனால் வாலி நிற்கும் இடமிருந்து இராமனை நோக்கினால் அவன் தெரிவதில்லை.
பேளூர்:
சேலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வசிஷ்ட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிதில மடைந்த இந்த சிவன் கோயிலுக்குப் பெயர் தான்தோன்றிநாதர் கோயில். இக் கோயிலிலுள்ள நிருத்த மண்டபம் உன்னதச் சிற்பக்கலையரங்கமாகத் திகழ்கின்றது. இம்மண்டபத்திலுள்ள தூண்கள் ஒவ்வொன்றும், தாரமங்கலத் தூண் சிற்பங்களை ஒத்துக் காணப்படுகின்றன. இங்கும் யாழியின் வாயில் கற்குண்டு உண்டு.
இக்கோயிலின் வடபால் சிங்கத்தின் வாயில் புகுந்து கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு வியப்புக்குரியது. தென்பாலுள்ள புனிதமரமான - தலவிருச்சமான பலாமரம் இலுப்பை மரமாகக் காட்சி தருவது வியப்புக்குரியது. இத்திருக்கோயிலிலுள்ள எட்டுத் திருக்கரங்களோடும், ஐம்படை ஆயுதங்களோடும் விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் அறுமுகங்களோடு விளங்குவது கண்டு மகிழத்தக்கது. அவ்வாறே முருகப் பெருமான் ஆறுமுகங்களோடு விளங்ளுவதும் ஒரு வியக்கத்தக்கது.
ஆத்தூர்:
சேலத்திலிருந்து 51 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு பெரும் கோட்டை ஒன்று நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. வசிட்டா நதிக்கரையில் அமைந்துள்ளது. அதனால் ஆற்றுர் - தற்போது ஆத்தூராக உள்ளது. இந்நகரம் நெல் வணிகத்தால் சிறப்புபெற்று - 'ஆத்தூர்க் கிச்சிடி' புகழ்பெற்றது. இந்நகரத்தில் ஜவ்வரிசி உற்பத்திக் கூடங்கள் பல உள்ளன. கி.பி. 1559-1585 காலத்தில் இருந்த கெட்டி முதலியார் வம்ச சிற்றரசர்களால் இக்கோட்டைக் கட்டப்பட்டது. இக் கோட்டையிலுள்ள பெருமாள் கோயிலும் இவர்களாலே கட்டப்பட்டது. முதலியாரின் சிலை இக்கோயிலில் உள்ளது. இக்கோட்டையில் அகன்ற அகழியும், உயர்ந்த நெடுமதிலும், பீரங்கி அமைக்க மதிற்குமிழிகளும், ஓய்வு மண்டபக் குமிழிகளும், பகைவர் எளிதில் நுழைய முடியாத குறுவாயில்களும் அமைந்துள்ளன. நான்கு நெற்களஞ்சியங்களும், பாழடைந்த மண்டபங்களும், இராணியின் அந்தப்புரமும், இரண்டு நீச்சல் குளங்களும், இடிந்த மதிலும் காணப்படுகின்றன. இக் கோட்டையினுள் உள்ள சிவன் கோயிலுக்கு காயநிர்மலேசுவரன் கோயில் இருக்கிறது. அக்கோயில் ஆதித்தசோழன் பாணியில் காணப்படுகிறது.
ஆறகளூர்:
சேலத்திலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. தலைவாசலில் இருந்து தென்கிழக்கில் 4.கி.மீ. தொலைவில் உள்ளது. வசிட்டா நதியின் வலதுபக்கக் கரையில் அமைந்துள்ளது. மாவலிவாண வமிசத்தவரான 'வாணர்' என்போர், சோழர்களின் கீழிந்து இப்பகுதியை ஆண்டு வந்தனர். 'ஆறு அகழிகள்' இருந்தவூர் என்று சொல்லப்படுகிறது. ஏகாம்பரமுதலியார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டிய ஸ்ரீகாமேஸ்வரர் கோயில், கரிவரதபெருமாள் கோயிலும் உள்ளன. தியாகனுர் கிராமத்திலும், இவ்வூரிலும் புத்தர் சிலைகள் உள்ளன. காமேஸ்வரர் பேரில் 'காமநாத கோவை' என்ற இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.
சங்ககிரி:
சேலத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை சிதிலமடைந்து காணப்படுகிறது. பிற்காலத்தில் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இக்கோட்டையை பயன்படுத்தினர்.
பொய்மான் கரடு |
சேலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கதலி நரசிம்மப்பெருமாள் கோயில் உள்ளது.
பொய்மான் கரடு:
சேலத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. சமவெளிப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ள மலைத்தொடரில் குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேலம் - Salem - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, சேலத்திலிருந்து, கோயில், சேலம், தொலைவிலுள்ளது, தொலைவில், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, உள்ள, வாயில், நோக்கி, வாலி, அமைந்துள்ளது, இங்கு, உண்டு, கட்டப்பட்டது, தகவல்கள், தமிழ்நாட்டுத், மகிழத்தக்கது, அவ்வாறே, முருகப், கண்டு, வியப்புக்குரியது, காணப்படுகின்றன, பெருமான், விளங்குவது, districts, நூற்றாண்டில், பொய்மான், கரடு, | , காணப்படுகிறது, salem, கோட்டை, வசிட்டா, கோயிலும், சிவன், நதிக்கரையில், மீதும், இருப்பது, யாழியின், தூண்களில், போன்று, எட்டுத், தூண்கள், தூணும், கெட்டி, இங்குள்ள, சிற்பங்களை, இரண்டு, information, போன்ற, சிற்பி, செல்லும், தாரமங்கலம், தூண்