சேலம் - தமிழக மாவட்டங்கள்
பல்கலைக்கழகம் 1, பெரியார் பல்கலைக்கழகம்
பள்ளிகள்: தொடக்க நிலை - 1,254
நடுநிலை - 120
உயர்நிலை - 103
மேநிலை - 33
கல்லூரிகள்:
மருத்துவம் - 2
பல் மருத்துவம் - 1
பொறியியல் - 4,
பாலிடெக்னிக் - 5
சட்டம் - 1
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 11.
முக்கிய விளைபொருள்கள்:
நெல், பருப்புவகைகள், பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு,
நிலக்கடலை, மாம்பழம் மற்றும் ரோஜா, மல்லிகை. 521 ஹெக்டேர் பரப்பு
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
தொழிற்சாலைகள்:
விவசாயம் சார்ந்தவை - 125
காடு சார்ந்தவை - 31
கனிமப் பொருள் - 38
துணியாலைகள் - 393
பொறியியல் - 20
வேதிப்பொருள் - 95
ஸ்டார்ச் - 726
ஏனையவை - 410
சுற்றுலா இடங்கள்:
ஏற்காடு (மலைவாழிடம் - கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்),
மேட்டூர் அணை, தாரமங்கலம் கோயில், சேலம் உருக்காலை, சேலம்
கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.
வழிபாட்டிடங்கள்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், கந்தாஸ்ரமம், தாரமங்கலம்
கைலாசநாதர் ஆலயம், சேலம் ராஜகணபதி ஆலயம், சுகவனேஸ்வரர்
திருக்கோயில்.
முக்கியத் திருவிழாக்கள்:
மாரியம்மன் திருவிழா. ஆடிப்பெருக்கு விழா, மற்றும் ஏற்காடு
கோடை விழா.
மாவட்டத்தில்
குறிப்பிடத்தக்கோர்:
டாக்டர் சுப்பராயன் - முன்னாள் அமைச்சர்;
மோகன் குமாரமங்கலம் - அமைச்சர்; சுதந்திரப் போராட்ட வீரர்
மாம்பலக்கவிராயர்; டாக்டர். குருபாதம் (ராஜாஜி அமைச்சரவை
உறுப்பினர்); எஸ்.பி.ராமசாமி - (சுதந்திரத்திற்கு முன்
மத்தியமைச்சர்) இசையுலகில் புகழடைந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்;
இசையரசி சேலம் ஜெயலட்சுமி; முன்னாள் அமைச்சர் இராசாராம்; புலவர்
வரதநஞ்சப்ப பிள்ளை; இராமசாமி கவுண்டர்; சேலம் வழக்கறிஞர்
விஜயராகவாச்சாரியார்; 'கலைமகள்' இதழ் கி.வா.ஜகன்னாதன், கவிஞர்கள்
சி.மணி, உமாபதி, முருகுசுந்தரம், சேலம் தமிழ்நாடன் முதலியோர்.
சேலம் மாவட்ட SALEM என்ற ஐந்தெழுத்தின் சிறப்புகளாவன:-
S - Steel - எஃகு
A - Aluminium - அலுமினியம்
L - Limestone - சுண்ணாம்புக் கல்
E - Electricity - மின்சாரம்
M - Mangoes - மாம்பலம்
இயற்கை வளம்:
இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண்,
மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும்,
வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி
திணையைச் சார்ந்தது. கல்ராயன், சேர்வராயன், கஞ்சமலை, தீர்த்தலை,
ஏற்காடு மலை, நைனாமலை, கபிலமலை முதலியவை முக்கியமானவை.
கனிவளம்:
கஞ்சமலை, தீர்த்தலை முதலிய மலையில்
இரும்புத் தாது உள்ளது. கஞ்சமலையில் உள்ள இரும்புத்தாது எளிதில்
வெட்டியெடுக்கும்படி அமைந்துள்ளது. இம்மலையில் சுமார் 45 கோடி டன்
எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றிலிருந்து எடுக்கக்கூடிய இரும்புத்தாதுவின் அளவு 304
மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப்
பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது
அதிக அளவில் கிடைக்கின்றது. இம்மாவட்டத்தில் கிடைக்கும் மாக்னசைட்
தாது இந்தியாவிலேயே முதல் தரமானதாகக் கருதப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
சேலம் - Salem - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சேலம், தாது, tamilnadu, மாவட்டங்கள், தமிழக, அமைச்சர், தகவல்கள், தமிழ்நாட்டுத், salem, ஏற்காடு, சார்ந்தது, அலுமினியம், முன்னாள், இம்மாவட்டத்தில், இரும்புத், கணக்கிடப்பட்டுள்ளது, | , டாக்டர், தீர்த்தலை, கஞ்சமலை, சேர்வராயன், கோயில், கல்லூரிகள், மருத்துவம், பல்கலைக்கழகம், information, districts, பொறியியல், சார்ந்தவை, ஆலயம், மாரியம்மன், கந்தாஸ்ரமம், தாரமங்கலம், விழா