சேலம் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | சேலம் |
பரப்பு : | 5,237 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,482,056 (2011) |
எழுத்தறிவு : | 2,285,562 (72.86 %) |
ஆண்கள் : | 1,781,571 |
பெண்கள் : | 1,700,485 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 665 |
சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.
பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு 'பாரமஹால் மற்றும் சேலம்' மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொது விபரம்:
வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து); காவல்
நிலையம்: 31; அஞ்சல் நிலையங்கள்: தலைமை அஞ்சலகம் - 394;
திரையரங்குகள்: 136; தொலைபேசிகள்: 96,564; மழையளவு: சராசரி 841
மி.மீ.; சில சமயம் 1,056 மி.மீ.; முக்கிய ஆறுகள்: காவிரி,
மணிமுத்தாறு, வசிஷ்ட நதி; அணைகள்: மேட்டூர் (ஸ்டான்லி
நீர்த்தேக்கம்) ஆனை மடுவு, கரிய கோவில்;
உள்ளாட்சி நிர்வாகம்:
மாநகராட்சி - 1; நகரசபைகள் - 3; ஊராட்சி ஒன்றியங்கள் - 20;
பேரூராட்சிகள் - 34; பஞ்சாயத்துகள் - 376; கிராமங்கள் - 3,100;
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள் - 4; வட்டங்கள் - 9;
சட்ட சபை தொகுதிகள் :
12: மேட்டூர், தாரமங்கலம், பனைமரத்துப்பட்டி, ஓமலூர், ஏற்காடு,
சேலம்-1, சேலம்-2, வீரபாண்டி, ஆத்தூர், தலைவாசல், சங்ககிரி,
எடப்பாடி.
பாராளுமன்றத் தொகுதிகள் 4:
ராசிபுரம் (நாமக்கல்), சேலம், திருச்செங்கோடு, தர்மபுரி
(சேலம் மட்டும் முழுத்தொகுதி, மற்றவை வேறு மாவட்ட பகுதி)
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
சேலம் - Salem - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சேலம், மாவட்டம், இருந்து, தமிழக, தர்மபுரி, tamilnadu, மாவட்டங்கள், என்றும், மாவட்டத்தின், தகவல்கள், உருவாக்கப்பட்டது, தமிழ்நாட்டுத், சேர்வராயன், மாவட்ட, தலைநகராகக், கொண்ட, | , ஆட்சித், சேலத்திற்கு, நிர்வாகம், தொகுதிகள், மேட்டூர், நாமக்கல், மாற்றப்பட்டது, பாரமஹால், தலைநகர், ஆயிற்று, மக்கள், வரலாறு, information, districts, salem, வந்துள்ளது, பகுதியில், தொடர்ந்து, பகுதிகளைக், 1792இல், சேரலம், உள்ள, கொண்டு