நாமக்கல் - தமிழக மாவட்டங்கள்
இக்கொல்லி மலை தென்வடலாக 28 கி.மீ. நீளமும் கீழ் மேலாக 19
கி.மீ. அகலமும் உள்ளது. இம்மலையிலுள்ள பச்சைமலையாளிகளில் 360
பிரிவுண்டு. முக்கியமானவை: சக்கரவர்த்தி, கூத்தாடி, சோப்பையன்,
சோத்தவடமன், கெளரசை, சிறுப்பை, வாரப்பன் ஆகியவைகளும் இவர்களின்
தலைவர்களுக்கு பட்டக்காரர் என்றும், அடுத்தவருக்குக் கரைக்காரர்
என்றும் பெயர். இவர்கள் திருமணத்தில் தாலியை மணப்பெண் கழுத்தில்
கரைக்காரன் கட்டுகிறான். இவர்கள் தமிழை இழுத்து பேசுகின்றனர்.
இம்மலையில் 'கொல்லிப்பாவை' வாழ்வதாக புறநானுறு, குறுந்தொகை, சிந்தாமணி, நற்றிணை, சிலப்பதிகாரம் முதலிய நூற்களில் குறிப்பு உண்டு.
நாமக்கல்லிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள சேந்தமங்கலம் சென்று, அங்கிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் சோலைக்கொல்லை வழியாகக் கொல்லிமலையிலுள்ள அறப்பளீசுவரர் கோயிலுக்கு செல்லலாம்.
கஞ்சமலை:
கஞ்சமலை, சேலம் - ஈரோடு இருப்புப் பாதையில் வேம்படி தாளம் என்னும் இரயில் நிலையத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இது கீழ்மேலாக 9 கி.மீ. நீளமுள்ள மலைத்தொடராக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் மேற்புரம் மலையடியில் சித்தேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதமாத சிவராத்திரியும், சித்திராப் பெளர்ணமியும் திருவிழா நாட்களாகும்.
ஏழூர்:
இவ்வேழூர், நாமக்கல்லின் வடக்கில் பத்துக்கல் தொலைவில், திருச்செங்கோடு - இராசிபுரம் சாலையில் உள்ளது. இங்குத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவன், தேசீசுரம் என்னும் திருப்பெயர் பூண்டு விளங்குகிறார். தேவார வைப்புத்தலம்.
மோகனுர்:
நாமக்கல்லுக்குத் தெற்கே பதினெட்டு மைல் தொலைவில் காவிரியின் வடபால் மோகனுர் என்னும் திருத்தலம் உள்ளது. சங்க காலத்தில் பழையன் என்னும் வேளிர் மரபினன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இதை "மழையொழுக்கறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர்" என மதுரைக் காஞ்சி கூறுகிறது. மோகூர் என்பதன் திரிபே மோகனுர் என்பது.
நைனாமலை:
நாமக்கல்லுக்கு வடகிழக்கில் பத்துமைல் தொலைவில் நைனாமலை அமைந்துள்ளது. இங்கு வரதராசபெருமாள் கோயில் உள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகு மிகுந்தவை. நயன மலையே நைனாமலை என்று ஆயிற்று.
கபில மலை:
நாமக்கல்லுக்கு மேற்கில் ஆறு மைல் தொலைவில் கபிலமலை என்னும் மலைத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மலை காவி நிறமுடையதானதால் கபிலமலை என்னும் பெயர் பெற்றது என்பர். சங்க காலப் புலவர் கபிலர் வாழ்ந்ததாகவும் கூறுவர். இம்மலைமீது முருகன் கோயில் அமைந்துள்ளது. இம்மலைக்குச் செல்லும் வழியில், நடுமலையில் ஒரு கற்குகை உண்டு. மலைக்கோயிலில் ஆண்டுதோறும் தைமாதத்தில் சிறப்பாக விழா நடைபெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தொலைவில், என்னும், உள்ளது, அமைந்துள்ளது, tamilnadu, நாமக்கல், மாவட்டங்கள், தமிழக, நைனாமலை, மோகனுர், தமிழ்நாட்டுத், தகவல்கள், கொண்டு, மைல், நாமக்கல்லுக்கு, கபிலமலை, | , கோயில், இங்கு, பழையன், சங்க, உள்ள, என்றும், information, districts, namakkal, பெயர், இவர்கள், கஞ்சமலை, சுமார், உண்டு, திருக்கோயில்