நாமக்கல் - தமிழக மாவட்டங்கள்
திருச்செங்கோடு:
செங்குன்றுர் என்னும் பழைய பெயர் காலப்போக்கில் செங்கோடு - திருச்செங்கோடு என வழங்கப்பட்டு வருகிறது. சேலத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலுள்ளது. திருச்செங்கோட்டில் நூற்பு ஆலைகள் அதிகம். இங்கு முதலியார் வகுப்பினர் அதிகமாக வாழ்கின்றனர். திருச்செங்கோடு மலை, சங்ககிரி இரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 32 கி.மீ. தொலைவுள்ளது. இம்மலை மீது ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படிக்கட்டுப் பாதையில்ஏறிச் செல்லும்போது கணக்கில்லாத குரங்குகள் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் காணலாம். இப்படிக் கட்டுப் பாதையில் இடையிடையே
திருச்செங்கோடு |
மலையின் மேல் திருக்கோயிலுக்குக் கீழ்ப்பாகத்தில் உள்ள சிகரத்திற்கு செல்லும்முன் உள்ள ஒரு குகை வடிவில் உள்ள பாறையிடுக்கு இருக்கிறது. அதையடுத்து உள்ளது குமர தீர்த்தம். திருச்செங்கோட்டு மலையின் பெயரே ஊருக்கும் அமைந்துள்ளது. ஊரின் நடுவில் உள்ள கைலாசநாதரை 'நல்ல தம்பிரான்' என்றும், மலைமேல் உள்ள அர்த்தநாரீசுவரரை 'மலைத் தம்பிரான்' என்றும் மக்கள் அழைக்கின்றனர். அம்மைக்கு தனிக் கோயில். கைலாசநாதர் கோயிலிலிருந்து அரை கி.மீ. தூரத்தில் மலையின் அடிவாரம் உள்ளது. மலைமீதுள்ள திருக்கோயில் ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுரவாயிலை விட்டு இறங்கியதும் திருச்சந்நிதியில் திருக்காட்சியருளும் செங்கோட்டு வேலவர் திருவுருவம், சுமார் மூன்றரை அடி உயரம் கவரும். மலைமீதுள்ள கோயிலில் மூலவராக சிவலிங்கம் இல்லாமல் 'மாதொருபாகன்' இருப்பது இந்த தலத்தின் சிறப்பு.
கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவத்தலங்களுள் இவ்வூரும் ஒன்று. தேவாரப் பாடல்பெற்றது. அருணகிரிநாதரால் 27 திருப்புகழுக்கு உரிய ஊர். தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் இவ்வூரை 'கொடிமாடச் செங்குன்றுர்' என்றே குறிப்பிடப்படுகிறது.
செங்குன்றுர்க் கிழார், உரிச்சொல் ஆசிரியர் காங்கேயர், கபிலதேவர், திருச்செங்கோட்டுப் புராண ஆசிரியர், கவிராய பண்டிதர் முத்துசாமிக் கோனார் முதலியோர் வாழ்ந்து சிறப்புப் பெற்றது திருச்செங்கோட்டுப்பதி.
இராசிபுரம்:
நெய், தயிருக்கு புகழ்பெற்றது. இங்கு கால்நடை வளர்ப்பு சிறப்பு. ஜவ்வரிசி தொழில் பெருகி வளர்ந்துள்ளது. இராசிபுரத்திலிருந்து சேந்தமங்கலம் வழியாக நாமக்கல் செல்லும் வழியில் பேளுக்குறிச்சி என்ற சிற்றுர் உள்ளது. அதனை அடுத்து கொல்லிமலைச் சாரலில் குன்றுதோறும் ஆடும் குமரனுக்கு கோயில் ஒன்று உள்ளது. அது பழனியப்பர் கோயில் என அழைக்கப்படுகிறது இக்கோயிலின் சிறப்பு. குமரக் கடவுள் நின்றுகொண்டு, கையில் தண்டத்துடனும், தலையில் அழகான கொண்டை காணப்படுகிறது. வேறு எங்கும் காணமுடியாத வடிவம் இது!
கொல்லி மலை:
கொல்லி மலை |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இங்கு, நாமக்கல், உள்ளது, தமிழக, உள்ள, கோயில், திருச்செங்கோடு, tamilnadu, மாவட்டங்கள், தகவல்கள், அமைந்துள்ளது, தமிழ்நாட்டுத், மலையின், சிறப்பு, உயரம், சுமார், தம்பிரான், என்றும், மலைமீதுள்ள, கொண்டை, இங்குள்ள, கொல்லிமலை, | , அறப்பளீஸ்வரர், வாழும், ஆசிரியர், பெற்றது, கொல்லி, ஒன்று, ஐந்து, வருகிறது, தொலைவிலுள்ளது, வாழ்கின்றனர், செங்குன்றுர், information, namakkal, districts, தொலைவிலும், நாமக்கல்லிலிருந்து, இறங்கியதும், இருப்பது, அழைக்கின்றனர், காணலாம், ஏறிச், இம்மலை, மீது, மேல்