நாமக்கல் - தமிழக மாவட்டங்கள்
கொல்லி மலை, ஆகாய கங்கை அருவி (உயரம் 130 அடி); நாமக்கல்
கோட்டை கோயில்கள்;
வழிபாட்டு மையங்கள்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்,
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், காளிப்பட்டி
ஸ்ரீகந்தசாமி கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.
மாவட்டத்தில்
குறிப்பிடத்தக்கோர்:
நாமக்கல் மாவட்டத்தில் பிறந்து தமிழகம்
முழுவதும் மணம் வீசும் மலர்கள்: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
பிள்ளை; வெள்ளையரை எதிர்த்து மடிந்த மாவீரன் தீரன் சின்னமலை;
மோகனுர் கவிஞர் கி.வா.ஜ;
மாவட்டத்தின் மலைவளம்:
நாமக்கல், இராசிபுரம் முதலிய பகுதிகளில்
பரவிய மலைகளை 'தால்காட் மலைகள்' என்று அழைக்கின்றனர். இங்கு
பச்சைமலை, கொல்லிமலை, கபிலமலை, திருச்செங்கோடு மலை,
சேர்வராயனின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தின் பகுதிகளாகும்.
கனிவளம்:
திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல்
கிடைக்கின்றது. இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைக்கு இது பயன்படுகிறது. நாமக்கல் வட்டத்தில்
'கல்நார்' கிடைக்கிறது.
வேளாண்மை:
காவிரியின் முக்கிய துணையாறான சரபங்க நதி,
திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள பல ஏரிகளை நிரப்புகிறது. இதன்
முலம் இப்பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது. நாமக்கல்,
திருச்செங்கோடு வட்டங்களில் மண்வளம், பெரும்பாலும் செம்மண்
நிலமாகவே அமைந்துள்ளது. சிற்சில பகுதிகளில் சிறிதளவு கருமண்
நிலம் அமைந்துள்ளது. மோகனுர், பரமத்தி, கபிலர் மலை ஆகிய
பகுதிகள் காவிரி நீர்ப்பாசனம் பெறுகின்றன. மேட்டூர் கால்வாயினால்
எடப்பாடி, பள்ளிப்பாளையம் பகுதிகள் நீர்பாசன வசதி பெற்றுள்ளன.
கொல்லிமலைப் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் நிலப்பகுதிகள்
ஆற்றுப் பாசன வசதியைப் பெற்றுள்ளன. ஏரி, குளம், கிணறுகள் முலம்
இவ்வேளாண் பிரிவில் 1, 31, 636 ஏக்கர் நிலப்பகுதிகள் நீர்ப்பாசன
வசதி தவிர, ஏனைய பகுதிகள் பெரும்பாலும் நீர்ப்பாசனத்திற்கு மழையை
நோக்கியுள்ளன. நாமக்கல் வேளாண்மைப் பிரிவு நிலப்பகுதிகளில்
நெல், கரும்பு, சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை, பருத்தி
ஆகியவை பயிரிடப்படுகின்றன. இப்பிரிவில் 63189 பாசனக் கிணறுகள்
உள்ளன.
தொழில்கள்:
மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை
நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை
இயங்கி வருகின்றது. திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய
இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன.
லாரி பாடி கட்டுதல்:
லாரி பாடி கட்டுதல் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், லாரி, திருச்செங்கோடு, பாடி, tamilnadu, தமிழக, மாவட்டங்கள், கோயில், கட்டுதல், தமிழ்நாட்டுத், பகுதிகள், சுமார், தகவல்கள், கிணறுகள், ஏக்கர், தொழிற்சாலை, நிலப்பகுதிகள், லாரிகள், கட்டும், | , தொழில், மக்கள், பெரிய, பெற்றுள்ளன, நடைபெற்று, விவசாயம், மாவட்டத்தில், கவிஞர், மோகனுர், கொல்லிமலை, information, namakkal, districts, பகுதிகளில், ஆகியவை, அமைந்துள்ளது, ஆகிய, பெரும்பாலும், முலம், வட்டத்தில், முக்கிய, வசதி