நாமக்கல் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | நாமக்கல் |
பரப்பு : | 3,420 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,726,601 (2011) |
எழுத்தறிவு : | 1,176,131 (74.63 %) |
ஆண்கள் : | 869,280 |
பெண்கள் : | 857,321 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 505 |
கொங்கு நாட்டின் பகுதியாக வரலாறு முழுவதும் இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கும்பெனி படைக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டே பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலகாட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது. 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து 'நாமக்கல்' மாவட்டம் உருவாக்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகம்:
நகராட்சி - 4; நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம்,
இராசிபுரம்; பேரூராட்சிகள் - 20; பஞ்சாயத்துக்கள் - 33;
வருவாய் நிர்வாகம்:
கோட்டங்கள் - 2; வட்டங்கள் - 4;
சட்டசபைத் தொகுதிகள்
6: நாமக்கல், கபிலர் மலை, திருச்செங்கோடு, சங்ககிரி,
சேந்தமங்கலம், இராசிபுரம்.
பாராளுமன்றத் தொகுதிகள்
2: திருச்செங்கோடு, இராசிபுரம்.
கல்வி:
தொடக்க நிலை பள்ளிகள் - 810 நடுநிலை பள்ளிகள் - 63 உயர்நிலை
பள்ளிகள் - 70 மேல்நிலை - 84 கல்லூரிகள் - 5
தொழிற்சாலைகள்:
கைத்தறி மற்றும் விசைத்தறி, லாரி பாடி கட்டுதல், பொறியியல்
தொழில்கள், கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி. பெரிய
தொழிற்சாலைகள் - 30; சிறு மற்றும் நடுத்தர ஆலைகள் - 14,500;
போக்குவரத்து:
போக்குவரத்து வாகனங்கள் - 12,027. மினி பேருந்துகள் - சுமார்
89; தமிழகத்திலேயே அதிக மினி பேருந்துகள் இயக்கப்படும் மாவட்டம்;
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
நாமக்கல் - Namakkal - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நாமக்கல், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, இராசிபுரம், இருந்து, பள்ளிகள், சேலம், தமிழ்நாட்டுத், பாரமஹால், உருவாக்கப்பட்டது, திருச்செங்கோடு, தகவல்கள், சேலத்திற்கு, ஆட்சித், தலைநகர், மாற்றப்பட்டது, தொகுதிகள், பேருந்துகள், | , மினி, போக்குவரத்து, என்றும், தொழிற்சாலைகள், நிர்வாகம், தர்மபுரி, வரலாறு, கொங்கு, மக்கள், information, namakkal, districts, பின்னர், 1792இல், பகுதிகள், தலைநகராகக், மாவட்டத்தின், பகுதிகளைக், தொடர்ந்து, கொண்ட