கரூர் - தமிழக மாவட்டங்கள்
கடலூர் :
திருமலைநாயக்கரிடம் பணிபுரிந்த முத்தைய நாயக்கர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட ஊராகும். குளித்தலைக்குத் தென் மேற்கில் சுமார் 28 மைல் தொலைவில் உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்று விளங்கும் வேளாண்மையாலும், சிறுதொழில் வளர்ச்சியாலும் சிறப்படைந்து வருகிறது.
நுங்கவரம் :
குளித்தலையிலிருந்து தென்கிழக்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. சிவாலயத்தாலும், சாத்தண்டி அம்மன் ஆலயத்தாலும் சிறப்புறுகிறது.
பாப்பாக்காள்பட்டி :
குளித்தலைக்குக் கிழக்கில் எட்டு மைல் தொலைவில் உள்ளது. பாப்பாக்காள் என்னும் பெண்மணியால் ஏற்பட்ட ஊர் என்பர். இவ்வூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது.
இரத்தினகிரி :
குளித்தலைக்குத் தென்மேற்கில் சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. கூம்பான தோற்றத்தில் காணப்படும் மலைப்பகுதியால் இரத்தினகிரி என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். இம்மலையின் உயரம் 1178 அடி. இதன் உச்சியை அடைய 952 படிகள் வெட்டப்ட்டுள்ளன. இறைவனுக்கு இரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் வழங்குகிறது. இக்கோவில் சுற்று மதில்களில் ஹொய்சள மன்னர் வீரசோமேஸ்வரர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
முசிறி :
வட்டத்திற்கும், ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலைநகராய் விளங்குகிறது. வாணிகமும் வேளாண்மையும் செழித்து வளர்ந்துள்ளன. புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது. காவிரியிலிருந்து பிரியும் பெரிய வாய்க்கால் ஊருக்கு அணைப்பாக ஓடுகிறது. அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிலையங்கள் முதலியவற்றால் ஊர் சிறப்புற்று விளங்குகிறது.
தொட்டியம் :
தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர். மக்கள் தொகை மிகுதி. வெற்றிலைக்கு இவ்வூர் புகழ்பெற்றது. வேளாண்மையும் சிறப்புற நடைபெறுகிறது. இது பேரூராட்சியாக விளங்குவதால், பல அரசு அலுவலகங்களும், ஒன்றிய மருத்துவ மனையும் உள்ளன. பேருந்து வசதி பெற்றுள்ளது. முஸ்லீம்கள், யாதவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
வேலாயுதம்பாளையம் :
கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றுர். வேளாண்மை சிறப்புற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆர்நாட்டார் மலை, சேர அரசர்கள் மூவரின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது.
தொழில் :
புகளூர் சர்க்கரை ஆலை :
தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் சர்க்கரை ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது காலத்தால் பழமையானது. நாளொன்றுக்கு சுமார் 1500 டன் கரும்புச்சாறு பிழியப்படுகிறது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனம் :
இக்காகித ஆலை புகளூரில் ரூ.236 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 50,000 டன் செய்தித்தாள் காகிதமும், 40,000 டன் எழுது அச்சுக் காகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 40 கோடி அன்னிய செலாவணி மிச்சப்படுகிறது. இங்கு கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கிறார்கள். 785 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரூர் - Karur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, தொலைவில், மைல், கரூர், tamilnadu, தமிழக, மாவட்டங்கள், ஊராட்சி, சுமார், இவ்வூர், தகவல்கள், தமிழ்நாட்டுத், சர்க்கரை, புகளூர், உள்ள, செய்தித்தாள், உற்பத்தி, | , காகிதமும், தொட்டியம், கோடி, விளங்குகிறது, districts, information, கடலூர், என்னும், இரத்தினகிரி, குளித்தலைக்குத், karur, பெயர், வேளாண்மையும்