கரூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | கரூர் |
பரப்பு : | 2,904 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 1,064,493 (2011) |
எழுத்தறிவு : | 727,044 (75.60 %) |
ஆண்கள் : | 528,184 |
பெண்கள் : | 536,309 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 367 |
கரூர் மாவட்டம் பலகாலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால்திருச்சி மாவட்டத்தின் வரலாறு கரூர் மாவட்டத்திற்கும் பொருந்தும். (காண்க : திருச்சி மாவட்டம்) நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
வருவாய் நிர்வாகம் :
கோட்டங்கள்-2 (கரூர், குளித்தலை); வட்டங்கள்-4 (கரூர்,
அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்).
உள்ளாட்சி நிறுவனங்கள் :
ஊராட்சி ஒன்றியம்-8 (கரூர், தாந்தோனி, கே.பரமத்தி,
அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடலூர்).
எல்லைகள் :
வடக்கில் நாமக்கல், பெரம்பலூர்
மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களையும்,
தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு
மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் :
கடம்பவனநாதர் கோயில் :
திருச்சிக்கு மேற்கே 31 கி.மீ தொலைவிலும், குளித்தலை இரயில்
நிலையத்திற்கு வடமேற்கே 1 1/2 கி.மீ தொலைவிலும் உள்ள
திருகடம்பந்துறையில் இக்கோயில் உள்ளது. இறைவன்-கடம்பவனநாதர்.
இறைவி-முற்றிலா முலையம்மை. தீர்த்தம்-காவிரி. தலவிருட்சம் -
கடம்பமரம். இது அப்பர் பதிகம் பாடிய தலமாகும். கண்ணுவ
முனிவருக்கும் தேவர்களுக்கும் சிவபெருமான் கடம்ப மரத்தின் அடியில்
நின்று காட்சி கொடுத்த ஊர்.
இரத்தினகிரிநாதர் கோவில் :
இரத்தினகிரிநாதர் கோவில் |
மரகதாசலர் கோவில் :
திருச்சிக்கு மேற்கிலுள்ள குளித்தலை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் இருக்கும் திருக்கம்பந்துறை அடைந்து, காவிரியைக் கடந்து சென்றால் மறுகரையில் திருலிங்கநாத மலையைக் காணலாம். இம்மலையில் கோயில் உள்ளது. கோயிலை அடைய சுமார் 500 படிகட்டுகள் உள்ளன. இது சம்பந்தரால் பாடல் பெற்றது. ஒரே நாளில் காலையில் கடம்பர் கோயிலையும், நண்பகலில் இரத்தினகிரியையும், மாலையில் மரகதாசாலரையும் கண்டு வழிபடல் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் இவ்விதம் வழிபடுகிறார்கள். ஈ பூசித்தனால் திருலிங்கநாத மலைக்கு ஈங்கோய் மலை என்ற பெயரும் உண்டு.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
கரூர் - Karur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கரூர், திருச்சி, குளித்தலை, மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, மாவட்டங்களையும், உள்ளது, உண்டு, கோயில், இரயில், கோவில், பெரம்பலூர், தமிழ்நாட்டுத், தகவல்கள், மக்கள், இரத்தினகிரி, | , தொலைவில், என்றும், காகம், கார்த்திகை, திருலிங்கநாத, அதனால், இரத்தினகிரிநாதர், நடைபெறுகிறது, நண்பகல், பெயரும், தொலைவிலும், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வரலாறு, information, karur, districts, கடம்பவனநாதர், திருச்சிக்கு, பதிகம், பாடிய, அப்பர், தலவிருட்சம், வடமேற்கே, தலமாகும்