கரூர் - தமிழக மாவட்டங்கள்
குணசீலம் :
இவ்வூர் கோவிலில் பைத்தியங்கள் குணமாக்கப்படுகின்றனர்.
தான்தோணி :
கரூருக்கு கிழக்கில் 1 1/2 மைல் தொலைவில் உள்ளது. இங்கு பழைய காலத்துச் சத்திரங்கள் பல தக்க பராமரிப்பின்றி உள்ளன. விஷ்ணு கோயில் ஒன்று மலையில் கட்டப்பட்டுள்ளது. இது கலைச் சிறப்பு மிகுந்துள்ளது. வைஷ்ணவர்கள் இக்கோயிலில் கல்யாணம், பூணுல் அணிவித்தல் முதலியவற்றை நடத்துகின்றனர். கல்தச்சு வேலை சிறப்புத் தொழிலாக உள்ளது. வேளாண்மையும் சிறப்புற நடைபெறுகிறது.
மல்லப்பட்டி :
தான்தோணிக்கருகில் இவ்வூர் உள்ளது. இக்கிராமத்தில் கி.பி. 1783 இல் கரூரில் நடந்த போரில் இறந்த தளபதி ஸ்டேன்லி மற்றும் பல போர் வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட சமாதிகள் உள்ளன.
வெஞ்சமன் கூடலூர் :
கரூரிலிருந்து தென்கிழக்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. குடகனாறு இவ்வூரை ஒட்டி ஓடுகிறது. மதுரைப் பாண்டியர் கால கல்வெட்டுகள் எட்டு இவ்வூர் சிவாலயத்தில் உள்ளன. கொங்கு நாட்டு ஏழு சிவாலயங்களுள் இதுவும் ஒன்று.
வெண்ணமலை :
இவ்வூர் கரூருக்கு வடக்கில் உள்ளது. இங்குள்ள சுப்ரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவர்.
வேட்டை மங்கலம் :
கரூருக்கு வடமேற்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. வேட்டையாட வந்த சேர மன்னர், இப்பகுதியின் இயற்கைப் பேரழகால் கவரப்பட்டு, இவ்வூரை உண்டாக்கிப் பெயரிட்டதாகக் கூறப்படுகிறது.
குளித்தலை :
வட்டத்திற்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலைநகராய் விளங்குகிறது. வாணிகத்தில சிறந்திருப்பதாலும், அரசு அலுவலகங்கள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் இருப்பதாலும் இவ்வூரில் மக்கள் தொகை மிகுதி. இங்கு நெசவுத் தொழிலை மேற்கொண்டுள்ள தேவாங்கர் மிகுதியாக வாழுகின்றனர். வேளாண்மையும் வளமாக விளங்குகிறது. ஊரைச் சுற்றிலும் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. கல்வி வளமும் மேலோங்கியுள்ளது.
ஆண்டவர் கோயில் :
குளித்தலைக்குக் கிழக்கில் 20 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள மாமுண்டியா கோவில் புகழ் பெற்று விளங்குகிறது.
அணியாப்பூர் :
குளித்தலைக்குக் கிழக்கில் 20 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு ஏழு கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. மாசி மாதத்தில் பத்து நாள் திருவிழா நடைபெறும். அப்போது மக்கள் ஏராளமாகக் கூடுவர்.
தேவர் மலை :
குளித்தலைக்குத் தென்மேற்கில் 22 மைல் தொலைவில் உள்ளது. உக்கிர நரசிம்மர் கோயிலால் ஊர் சிறப்படைந்துள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரூர் - Karur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இவ்வூர், மைல், தொலைவில், மாவட்டங்கள், தமிழக, கரூர், tamilnadu, விளங்குகிறது, மக்கள், கிழக்கில், இங்கு, தமிழ்நாட்டுத், கரூருக்கு, தகவல்கள், கோவில், | , கூடுவர், districts, நடைபெறும், நிலையம், குளித்தலைக்குக், இவ்வூரை, information, கோவிலில், karur, கோயில், வேளாண்மையும், ஒன்று, இங்குள்ள