கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
பொள்ளாச்சி மகாலிங்கம்:
தமிழக பொருளாதாரம் சிறக்க உழைக்கும் தொழில் மேதைகளில் இவரும் ஒருவர். 'சக்தி குருப் ஆப் கம்பெனிஸ்' என்ற அமைப்பில் இவர் தொடாத தொழிலே இல்லை என்னும் அளவில், சர்க்கரை, துணி, குளிர்பானங்கள் தயாரிப்பது, உருக்காலை, செயற்கை வைரம், லாரி, கார் வாங்கி விற்பது, பொருள் போக்குவரத்து, டயர் புதுப்பித்தல், மற்றும் பல முகவாண்மைகளில் ரூ.200 கோடி முதலீட்டில் பலருக்கும் வேலை வாய்ப்பளித்து வருகிறார். இவர் நடத்தி வரும் தொழில்கள் - ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட், சக்தி பைனான்ஸ், ஸ்ரீசாமுண்டீஸ்வரி சுகர்ஸ்லிட், பண்ணாரியம்மன் சுகர்ஸ் லிட், சக்தி டெக்ஸ்டைல்ஸ், ஸ்ரீபகவதி டெக்ஸ்டைல்ஸ், ஆனைமலை என்ஜினியரிங், நாச்சிமுத்து பாலிடெக்னிக், சக்தி சாரிடிஸ், குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி, சக்தி ஆட்டோமொபைல்ஸ், ஆனைமலைஸ் ரீடிரெடிங், நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லுரி முதலியவைகளாகும்.
பொள்ளாச்சி மகாலிங்கம் |
ஜி.ஆர். தாமோதரன், இவர் கலைக்கதிர் என்கிற மாதஇதழ் மூலம் அறிவியல் தமிழ் வளர்ந்து வந்தார். இவர் சென்னைப்பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருமுறை இருந்தவர்.
டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் - இவர் கல்விஅமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு கல்வியை எடுத்துச்சென்றவர். மற்ற கோவை நகரப் பிரமுகர்கள் கோவை அய்யாமுத்து தோழர் பாலதண்டாயுதம், நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார், சி. சுப்பிரமணியம், அரங்கநாயகம், எஸ். மோகன் குமாரமங்கலம், ஜஸ்டிஸ். எஸ். மோகன், புதுமைப்பித்தன், சிவக்குமார், கே.ஏ. மதியழகன், உடுமலை நாராயக்கவி, கோவை செழியன் முதலியோர்.
பல்லடம்:
விவசாயமும், கைத்தறியுமே இவ்வூரின் முக்கியதொழில்கள். இங்கு புகையிலை தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, மாதிரிதோல் பதனிடும் நிலையம் ஒன்றை அமைத்து இத்தொழிலுக்கு ஊக்கமளித்து வருகிறது. பல்லடத்து பெருமக்கள் - புல்லாங்குழல் வித்வான், சஞ்சீவராவ், பல்லடம் மாணிக்கம், பல்லடம் முத்துக்குமரன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேட்டுப்பாளையம்
1956-ஆம் ஆண்டு ஸ்வீஸ் நாட்டு ஒத்துழைப்புடன் செயற்கை வைரத் தொழிற்சாலை நிறுவப்பட்டது. பல்வேறு தொழிலகங்கட்கும் தேவைப்படும் செயற்கை வைரக்கற்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக மின்சார மீட்டர்களுக்கும், கைக் கடிகாரங்களுக்கும் இவை இன்றியமையாதவை. நாளொன்றுக்கு 40 கிலோ செயற்கை வைரக் கற்கள் உற்பத்தியாகின்றன. மேட்டுப்பாளையத்தில் உரத் தொழிற்சாலை, கண்ணாடித் தொழிற்சாலை, மின் துணி சலவை, இவற்றோடு வெற்றிலைக் கொடிக்காலும் இவ்வூருக்குச் சிறப்புச் செய்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - சக்தி, தமிழக, இவர், செயற்கை, கோயம்புத்தூர், மாவட்டங்கள், tamilnadu, பல்லடம், மகாலிங்கம், தொழிற்சாலை, தமிழ்நாட்டுத், தகவல்கள், கோவை, மோகன், இங்கு, | , முதலியோர், சர்க்கரை, information, districts, பொள்ளாச்சி, coimbatore, ஆனைமலை, துணி, டெக்ஸ்டைல்ஸ்