கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சந்தை புகழ்பெற்றது. இங்கு அம்பர் சர்க்காத் தொழிலகத்தில் ஆண்டுக்கு சுமார் இலட்சம் சர்க்காக்கள் உற்பத்தியாகின்றன. பொள்ளாச்சி மேற்கே 13 கி.மீ. தொலைவில் ஆழியாறு கரையில் ஆழியாறு பேப்பர் மில் 1984 முதல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. பலதரப்பட்ட காகிதங்கள் ஆண்டொன்றுக்கு 500 டன் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 600க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
காடுபடு பொருள்கள் பொள்ளாச்சியில் நிரம்பக்கிடைக்கின்றன. பருத்தி பிரித்தெடுக்கும் ஆலைகள் 25 உள்ளன. துணி மற்றும் ரெடிமேட் ஆடைகள் வியாபாரம் பெருமளவில் நடைபெறுகிறது.
இவ்வூருக்கு மற்றொரு பெருமை தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் இவ்வூரைக் சார்ந்தவர் என்பதாகும்.
அவிநாசி:
அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைநகர். அவிநாசி கோவில் புகழ்பெற்றது. வரலாற்று சிறப்பு மிகுந்தது. பெருமளவு பருத்தியும், ஓரளவு கரும்பும் நெல்லும் விளைகிறது. சிறுமுகையில் விஸ்கோஸ் லிமிடெட் என்ற ரெயான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்திய - இத்தாலி நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இங்கு ஸ்டேபிள் பைபர் தயாராகிறது. 1000 மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
அனுப்பம்பாளையம்:
திருப்பூர் அருகே உள்ளது இவ்வூர். அனுப்பம்பாளையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெடுங்காலமாகவே பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ஆண்டொன்றுக்கு 150 டன்னுக்கு மேல் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
உடுமலை நாராயணக்கவி |
பழனிமலை, ஆனைமலை, திருமூர்த்திமலை ஆகிய மலைகளுக்கு ஊடே இருப்பதால் இவ்வூர் உடுமலைப்பேட்டை எனப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 400 மீ உயரத்தில் உள்ளது. இவ்வூரில் உரத்தொழிற்சாலை மின்சார மோட்டார் பம்பு உற்பத்தி, காகித ஆலை ஒன்று, குளுகோஸ் தயாரிக்கும் நிறுவனம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, நுல் ஆலை, பருத்தி அரைக்கும் ஆலை போன்றவை உள்ளன. இயற்கை எழில் மிக்க அமராவதிஅணை இங்கு கட்டப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பாடலாசிரியரும், பகுத்தறிவு பாடல்களை இயற்றியவருமான உடுமலை நாராயணக்கவி இவ்வூரினைச் சார்ந்தவர் என்பது இவ்வூருக்கு மற்றொரு சிறப்பாகும்.
திருமுருக்கன் பூண்டி:
திருப்பூரில் அருகில் உள்ளது இவ்வூர். இது பாடல் பெற்றதலம் ஆகும். இங்கு கல், செம்பு சிலைகள் செய்யும் தொழில் நடைபெறுகிறது. பலவெளி நாடுகளுக்கும் இவ்வூர் சிலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிற ஊர்கள்:
போத்தனுர் இரயில்வே தொழிற்சாலை முன்பு இருந்தது. கோவைக்கு அருகில் இருப்பதால் கோவையின் வளர்ச்சியை பொறுத்தே இந்நகரமும் வளருகிறது. புந்தி - உடுமலைக்கு 14 கி-மீ. தொலைவில் உள்ளது. இங்கு நல்லதேன் கிடைக்கும்.
சோமவார்பட்டி - கைத்தறிநெசவு, விவசாயம் சிறப்பாக உள்ளது. சங்கராராமநல்லுர் - கைத்தறி நெசவு, விவசாயம், கோயில் சிறப்பு உள்ள ஊர். திருமூர்த்திகோயில் - 3000 அடி உயரத்தில் உள்ளது. சுற்றுலாத் தலம்.
அன்னுர் - ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாக உள்ளது. கோவில், விவசாயம், கைத்தறி சிறப்பாக நடைபெறுகிறது.
கருத்தாம்பட்டி - கிருஸ்தவ சிறப்பு உள்ள ஊர்
காரமடை - ஊராட்சி ஒன்றியத் தலைநகர், காரமடை தேர், கோவில் சிறப்பு வாய்ந்தது.
கரவலுர் - கோவில் சிறப்பு சிவன், பருமாள் கோவில்கள்
மொண்டிப்பாளையம் - அவிநாசிக்கு 12 மைல் உள்ளது. வெங்கடரமண சாமி கோவில் புகழ்பெற்றது.
சேயூர் - பழைய கோவிலால் புகழ்பெற்றது
துடியலுர் - வாணிபத்தலம்
வெள்ளூர் - வரலாற்று சிறப்புமிக்க ஊர்
மைலேரிப்பாளையம் - பழைய ஜாகிர்
தெலுங்குபாளையம் - எலும்பு முறிவு சிகிச்சைக்குப்புகழ்பெற்றது.
ஆனைமலை - ஆனைமலைப் பகுதி தேயிலை உற்பத்தியின் மூல ஊற்று எனலாம். மத்திய அரசின் தேயிலை ஆய்வுகூடம் உள்ளது.
வால்பாறை - காப்பி, சின்கோனா, ஏலக்காய், போன்றவை இங்கு மிகுதியாக விளைகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உள்ளது, இங்கு, கோவில், சிறப்பு, tamilnadu, புகழ்பெற்றது, கோயம்புத்தூர், தமிழக, பொள்ளாச்சி, இவ்வூர், மாவட்டங்கள், அவிநாசி, விவசாயம், நடைபெறுகிறது, ஒன்றியத், ஊராட்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், இருப்பதால், உயரத்தில், போன்றவை, ஆனைமலை, நாராயணக்கவி, உடுமலைப்பேட்டை, அருகில், சிலைகள், பழைய, தேயிலை, | , காரமடை, உள்ள, coimbatore, சிறப்பாக, கைத்தறி, உடுமலை, districts, இவ்வூருக்கு, மற்றொரு, சார்ந்தவர், உற்பத்தி, பருத்தி, மேற்பட்டோர், பணியாற்றுகின்றனர், ஆண்டொன்றுக்கு, ஆழியாறு, தொழிற்சாலை, செய்யப்படுகின்றன, வரலாற்று, information, தொலைவில், தலைநகர், பாத்திரங்கள்