கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
கோவையின் தொழில் வளர்ச்சி:
கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்றுள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை. அடுத்த 20 ஆண்டுகளில் பல மில்கள் வளர்ந்தன. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கியதும் பல ஆலைகள் புதிதாகத் தோன்றின. கோவையில் மட்டும் ஏறக்குறைய அறுபது ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், பீளமேடு, கணபதி, உப்பிலிபாளையம் முதலிய இடங்களிலும் பல ஆலைகள் உள்ளன.
ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி |
சூலுர், சிங்காநல்லுர், பீளமேடு, இடங்களில் மட்டும் 31 பருத்தி பிரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.
பிளேடுகள்:
உள்நாட்டிலேயே பிளேடுகள் தயாரித்தது கோவைதான். இன்று ஆண்டுக்கு 2400 இலட்சம் பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையை பார்த்தே மற்ற மாநிலங்களில் பிற்காலத்தில் லேசர் பிளேடுகள் தயாரிக்கப்பட்டன.
கடைசல் இயந்திர தொழிற்சாலை:
இயந்திரம், துளையிடும் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திர குடைக்கல் போன்ற இயந்திரத் தொழிற் கருவிகள் தயாரிக்கும் நுற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இம்மாவட்டம் முழுவதும் உள்ளன. பெரும் தொழிற்சாலைகளுக்கு சிறு தொழிற்சாலைகளுக்கும் இவை முக்கியமானதால் இங்கு பெருகி வளர்ந்துள்ளன.
அஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை:
தீப்பற்றாத அஸ்பெஸ்டாஸ் கூரைகள் செய்யும் தொழிற்சாலை கோவைக்கருகில் 5 மைல் தொலைவில் 1953 முதல் செயல்பட்டு வருகிறது. அஸ்பெஸ்டாஸ் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 3 கோடி ரூபாய்க்கான இத்தொழிலில் 2500க்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
நீரிறைக்கும் பம்புகள்:
கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்புகள் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்ட்ரி பியூகல் பம்புகளையும் அதைச்சார்ந்த துணை உறுப்புகளையும் தயாரிக்கும் நுற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரி 7000 பம்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பல்வேறு மோட்டார் தொழிற்சாலைகள்:
வேளாண்மைக்கும், தொழிற்சாலைக்கும் அத்தியாவசியமான மோட்டார்கள் சிறிதும், பெரிதுமான பலவித வடிவங்களில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இறக்குமதி தளர்வினால் இத்தொழில் வளர வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தில் இயங்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 2 குதிரை திறன் முதல் 50 குதிரைதிறன் வரையுள்ள மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சராசரியாக மாதத்திற்கு 5000 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பால் உற்பத்தி:
இரண்டாம் பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 70 இலட்சம் செலவில் புதிய பால் பண்ணைக்கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பால்பண்ணைத் திட்டத்தின் மூலம் 500 சங்கங்கள் பலனடைகின்றன. நாள் ஒன்றுக்கு 1,50,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 1,02,000 விவசாயிகள் பயனடைகின்றனர். இதில் ஈடுபட்டுள்ள கால் நடைகளின் எண்ணிக்கை 1,32,000.
ஏ.சி.சி. சிமெண்ட்:
இத்தொழிற்சாலை கோவையிலிருந்து எட்டாவது மைல் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 2000 பேர் பணியாற்றுகின்றனர். மாதம் சராசரி 25,000 டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உற்பத்தி, செய்யப்படுகின்றன, இங்கு, ஆலைகள், பிளேடுகள், பால், கோயம்புத்தூர், தொழிற்சாலை, மாவட்டங்கள், tamilnadu, தமிழக, தொழிற்சாலைகள், அஸ்பெஸ்டாஸ், பம்புகள், மோட்டார்கள், பருத்தி, தமிழ்நாட்டுத், தகவல்கள், முழுவதும், தொலைவில், மைல், | , சிமெண்ட், coimbatore, திட்டத்தின், தயாரிக்கும், சராசரி, இதில், மேற்பட்ட, செய்யப்படுகிறது, ஆண்டுக்கு, கம்பெனி, districts, வீவிங், அண்டு, கோவை, ஸ்பின்னிங், மட்டும், சிங்காநல்லுர், information, இலட்சம், இன்று, பிரிக்கும், பீளமேடு, இயந்திர