கோயம்புத்தூர் - தமிழக மாவட்டங்கள்
காடு-மலை வளம்:
ஆனை மலையின் உயரம் கடல் மட்டத்திற்குமேல் 2000 அடி. இதன் சிகரங்கள் 4000 அடி உயரத்திலும், உச்சி முகடுகள் 5000 அடி உயரத்திலும் காணப்படுகின்றன. குச்சிமலை கடல் மட்டத்திலிருந்து 8500 அடி வரை உயர்ந்து நிற்கிறது. மைக்கேல் பள்ளத்தாக்கின் தெற்கில் குமரிக்கல் மலை காணப்படுகிறது. இது அஞ்சநாடு பகுதியில் 7000 அடி உயரத்தில் புதுக்கல் என்ற இடத்தில் காணப்படுகிறது.
வெள்ளியங்கிரிமலை இம்மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலையின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. இதன் சிகரங்கள் சில இடங்களில் 5000 அடி உயரத்தில் தென்படுகின்றன.
இம்மாவட்டத்தில் காட்டுவளம் மிகுந்து காணப்படுகிறது. இதன்மூலம் நிறைய மரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இத்தகைய செறிந்த காடுகள் அவிநாசி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் காணப்படும் காடுகளை எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
1. போலம்பட்டிப்பள்ளத்தாக்கு. கோயம்புத்தூர் - சிறுவாணிச்சாலை வழி இப்பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. இங்கு வாகை, கருவாகை, வேல்வாகை, பில்லமருது, தாடச்சி, கெங்கை, ஈட்டி, வெண்தேக்கு, வெள்ளநாகை, சாதாதேக்கு போன்ற உயர்ந்த மரங்களும் உள்ளன. 5000 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் வேடிப்பில்லா, பால் வடிஞ்சான், காட்டுப்பன்னை, மலைக்கொன்னை நாங்கு மரங்களும் வளர்ந்துள்ளன.
2. தாடகம் பள்ளத்தாக்கு - ஊஞ்சல், காட்டு எலுமிச்சை, தெரணை, புல்லாவரம், பொரசு, மலைக்கிளுவை, தணக்கு போன்ற மரங்கள் இங்கு வளர்கின்றன.
டாப்ஸ்லிப் பகுதி |
4. ஆனைமலை காடுகள் - துணக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பூனச்சி பகுதிவரை காணப்படுகிறது. இங்கு அதிக மழை பெறுவதால் காடுகள் செறிந்து காணப்படுகின்றன.
5. பொள்ளச்சி பகுதி - இங்கு தேக்கு, கருமருது, கடுக்காய், ஓதியமரம், இலவமரம், பெருமூங்கில், கல்மூங்கில் மிகுதியாக உள்ளன.
ஆறுகள்:
பவானி, நொய்யல், அமராவதி, சின்னாறு, குரங்கனாறு, ஆழியாறு, சிறுவாணி ஆறு, பரம்பிக்குளம், நீராறு, சோலையாறு, போன்றவை பாய்ந்து இப்பகுதியை வளப்படுத்துகின்றன.
அணைகள்
நீலி அணைக்கட்டு, பாதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, குறிச்சி, வெள்ளூர், சிங்காநல்லுர் போன்ற அணைக்கட்டுகளால் கோவை, பல்லடம் பகுதிகளில் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. அமராவதிக்கு குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டு 9000 ஏக்கர் நிலம் உடுமலை வட்டாரத்தில் பாசனம் பெறுகிறது.
அமராவதி நீர்த்தேக்கத்தின் மூலம் 40,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
நீர்மின் திட்டம்:
பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்மின் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் மூலம் 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
வேளாண் உற்பத்தி:
கோவை மாவட்டத்தில் 65 சதவீதம் உணவு தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு முதலிய உணவுப்பயிர்களும், துவரை, உளுந்து, கொள்ளு, மொச்சை கடலை முதலிய தானியங்களும், பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, தேங்காய், வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவையும் பெருமளவு விளைவிக்கப்படுகின்றன. பல்லடம் வட்டத்தில் பழவகைகள் அதிகம். கோவை மாவட்டத்தில் தென்னை மிகுதி. திருப்பூர், அவிநாசி எலுமிச்சைக்கும், பொள்ளாச்சி வெற்றிலைக்கும் பேர் பெற்றவை. ஆனை மலையில் ஏலக்காய், சின்கோ, ரப்பர் மரங்கள் விளைகின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயம்புத்தூர் - Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோயம்புத்தூர், காணப்படுகிறது, இங்கு, காணப்படுகின்றன, மாவட்டங்கள், மரங்கள், tamilnadu, தமிழக, அணைக்கட்டு, நிலம், பொள்ளாச்சி, போன்ற, உற்பத்தி, தமிழ்நாட்டுத், ஆழியாறு, தகவல்கள், பகுதி, காடுகள், கோவை, ஏக்கர், அணைகள், பரம்பிக்குளம், சோலையாறு, பாசனம், விளைவிக்கப்படுகின்றன, முதலிய, | , மாவட்டத்தில், நீர்மின், அமராவதி, பெறுகிறது, மூலம், பல்லடம், மரங்களும், சிகரங்கள், உயரத்திலும், உயரத்தில், இதன், கடல், districts, information, மலையின், இடங்களில், இம்மாவட்டத்தில், பகுதிகளில், வளர்கின்றன, டாப்ஸ்லிப், coimbatore, உடுமலைப்பேட்டை, செறிந்து, அவிநாசி, பெறுவதால்