பீஜித் தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழர் சாதனை:
அ) சாது குப்புசாமி அவர்கள் அமைத்த சங்கமே இன்றளவும் தமிழையும், தமிழரையும் காத்து வருகிறது. இவருடைய பீஜி பற்றிய குறிப்புகளே இன்றளவும் இத்தீவின் தொழிலாளர் வாழ்க்கையைச் சொல்லும் ஆவணமாக இருந்து வருகிறது.
ஆ) இராமகிருஷ்ண மிஷன், சுவாமி அவிசாநந்தரை பீஜிக்கு 1937 மே மாதம் அனுப்பியது. தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம் செயல்பட வேண்டுமானால் அதற்கு சட்டப் பூர்வமான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றார். 6.1.1938 இல் சட்டம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவருடைய முயற்சியினால்தான் தென் இந்திய மொழியில் மாணவர்கள் படிப்பதற்கு 'மித்யூஸ் கல்வி அறிக்கையை' செயல்படுத்தியது. மேலும் சுவாமியாரின் முன்முயற்சியில் மாதர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்ரீமதி முத்தம்மா கவுண்டர் செயல்பட்டார். அவிசாநந்தர் கூறியபடி ஓர் மாணவரில்லத்தையும் கட்டினர். ஒவ்வொரு தென் இந்தியர் வீட்டிலிருந்தும் தினம் ஒரு கைப்பிடி அரிசி அனுப்பப்பட்டு இவ்விடுதி நடத்தப்பட்டது.
இ) சுவாமி ருத்ரானந்தா மயிலாடுதுறையை அடுத்த மணல் மேட்டில் ஒரு பிரபலமான மிராசுதார் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் முத்துக்கிருஷ்ணன். சுவாமி எழுத்தாளர் 'கல்கி'யின் பள்ளித் தோழர். சுவாமி ருத்ரானந்தாவை, அவிசாநந்தர் பீஜிக்கு 1937ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார்.
சுவாமிருத்ரானந்தா இந்தியர்களுக்கு என்று ஆங்கிலத்தில் 'Pacific Review' என்ற வாரப்பத்திரிக்கையையும்; 'இந்தியில் ஜாக்ருதி' என்ற வார இதழையும்; 'சங்கம்' என்று தமிழ் இதழ் நடத்தியவர். இராமாயணம், திருக்குறள் ஆகியவை பீஜிமொழியில் வெளிவரக் காரணமாக இருந்தவர். தமிழர்களின் கல்விக் கண் திறக்க உழைத்தவர். தொழிற்சங்க வாதியாகவும் செயல்பட்டவர். இவர் இருந்த நந்தி என்ற ஊரிலிருந்து ஐந்துமைல் வட்டத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று பீஜிஅரசு சட்டம் போட்டது என்றால் சாமியாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்று தெரிந்து கொள்ளலாம். கொத்தடிமைகளாக சென்ற தமிழர் ஆலை முதலாளிகளாகவும், நிலச் சொந்தக்காரர்களாகவும் மாற்றிய பெருமை சுவாமி ருத்ரானந்தாவையே சாரும்.
ஈ) பால கணபதி: தமிழுக்கும், தமிழர்க்கும் பாடுபட்டு வருபவர்களில் தற்போது முக்கியமானவராக இருப்பவர். இவருடைய முயற்சியாலே தான் தமிழக அரசு பீஜி தமிழர்களுக்கு பாடபுத்தகங்களை அனுப்பியது; இவரே பீஜி தமிழர்களுக்கான பாடநூல்களைத் தயாரிக்கிறார். இவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க 3 புத்தகங்களை தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டது. பீஜி அரசின் தமிழ் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
வணிகம் தொழில் புரிவோர் விவரங்கள் :
பெரும்பான்மையான தமிழர்கள் விவசாயிகள், பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஓரளவு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். சிலர் 10 ஏக்கர் நிலத்தின் சொந்தக்காரர்களாகவும் இருக்கின்றனர். சொந்தமாக டிராக்டர் கூட பலர் வைத்திருக்கின்றனர். மூன்றில் 2 பேர் வானொலி; 20 இல் ஒருவர் வீடியோ வைத்திருக்கின்றனர். 40இல் ஒருவர் கார் வைத்திருக்கிறார். சில தமிழர்கள் குஜராத்திகள் கடையில் பணிபுரிகின்றனர். இவர்கள் வீடுகளில் தமிழ்ப் பெண்கள் வேலை செய்கின்றனர். சிலர் ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிகின்றனர். பெரும் பதவி வகித்தத் தமிழர் மாணிக்கம் பிள்ளை ஆவார். இவர் அமைச்சர் அலுவலகத்தில் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.
நெருக்கடிக் காலம் :
1975-ஆம் ஆண்டு இந்தியர்களை நாடு கடத்த முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. 1987-ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் பீஜியில் தேர்தல் நடந்தது. இந்தியர்களுக்கு மிகுதியான செல்வாக்கு உள்ள அரசு முதன் முதலாகப் பதவிக்கு வந்தது. இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு ஓங்கியதை விரும்பாத பீஜியர்கள் கர்னல் ராம்புகா தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் 'இந்தியர் ஆட்சியை' கவிழ்த்தார்கள் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. இதற்குக் காரணம் வட இந்தியர்களில் குஜராத்திகள் பெரிய வணிகங்களை தம் கையகப்படுத்தியதிலிருந்து பீஜியர்களுக்கும்-இந்தியர்களுக்கும் நெருக்கடி உருவானது. இதில் அப்பாவி தமிழர்களும் அல்லல் படுகின்றனர். இதையடுத்து தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலியவற்றிற்கு குடிபெயறும் நிலை தோன்றியுள்ளது.
"பொங்குணகடல் கடந்து-சென்றிப் பூவுலகத்திலே எங்கெங்கு வாழ்ந்தாலும்-தமிழர் ஏககுலத்தவராம் கோடாரி மண்வெட்டி-கலப்பை கூந்தாலி ஏந்துவோரே நாடெல்லாம் ஆளுகின்ற உண்மை நாயகராவாரையா! பாழ்நிலத்தையெல்லாம்-திருத்திப்பயன் படுத்தி மக்கள் வாழ் நிலமாகத்-தமிழர் மாற்றின தாரறியார்? இலங்கை சிங்கபுரம்-பீஜி முதல் இன்னும் பலவான தலங்களின் செல்வம்-தமிழர் தந்த செல்வமன்றோ?" -கவிமணி தேசிகவிநாயகம்
தொகுப்பு : ப. திருநாவுக்கரசு
ஆதார நூல்கள்:
1. அயல்நாடுகளில் தமிழர்கள்-முனைவர் எஸ். நாகராஜன்.
2. பாரெல்லாம் பரந்த தமிழர்-எம்.ஆர்.பாலகணபதி
3. உலகத்தமிழர்-பாகம்-2-வீரப்பனார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீஜித் தீவில் தமிழர் - Tamils in Fiji - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், சுவாமி, பீஜி, பீஜித், நாடுகள், வாழும், தமிழர்கள், தீவில், செல்வாக்கு, ஆண்டு, இவர், இவருடைய, தென், தமிழ்நாட்டுத், தகவல்கள், பெரும்பான்மையான, tamils, அரசு, tamil, சொந்தக்காரர்களாகவும், விவசாயிகள், fiji, சிலர், ", | , குஜராத்திகள், ஒருவர், தமிழ், வைத்திருக்கின்றனர், இவர்கள், persons, பீஜிக்கு, அனுப்பியது, countries, வருகிறது, information, இன்றளவும், living, இந்திய, இந்தியர், tamilnadu, அவிசாநந்தர், மேலும், சங்கம், சட்டம், இந்தியர்களுக்கு