பீஜித் தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
தமிழ்மொழியின் நிலை
இன்றைய மக்கள் தொகையில் 70-80 ஆயிரம் பேர் தமிழர்கள் இருக்கலாம் என்கிறார் பால கணபதி. தமிழ்ப் பேசத் தெரிந்த 35 வயதுக்கு மேலான பெரியோர் 5 அல்லது 6 ஆயிரம் இருக்கலாம். இவர்களில் தமிழ் எழுதவும் தெரிந்தவர்கள் 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கலாம். மொத்தத்தில் 'தமிழ் தெரியாத தமிழர்களே' அதிகம். இன்று தமிழர்கள் வீட்டில் 'இந்தி'தான் பேசுகின்றனர். சுவாமி ருத்ரானந்தா அவர்கள் இராமாயணம், திருக்குறள் ஆகியவற்றின் பீஜிமொழி (கைவித்தி மொழி) பெயர்ப்பினை வெளிவரச் செய்தார். உறவுப்பெயர்கள், ஆட்களின் பெயர் மட்டும் தமிழாக இருக்கிறது. தமிழ்மொழி நிலைபெற திரு. அப்பாபிள்ளை (தமிழ்மொழி காப்பாளர் கழகம்) பீஜி-சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஆகியோர் சிறப்பாக பாடுபட்டு வருகின்றனர்.
"தென்னாடு விட்டே தீவாந்தரத்தையெல்லாம் பொன்னாடாய் மாற்றிப் புரந்திடுவோர்-எந்நாளும் ஓங்கும் அறிவால் உழைப்பால் பெரும்புகழைத்தாங்கும் தமிழரே தாம்" -கவிமணி.
கல்வி :
பீஜியில் கிருத்துவ பாதிரிமார்கள் ஆங்கிலவழி பள்ளிகளையே நடத்திவந்தனர். ஸ்ரீ மனோகரானந்தமஹராஜ் வடநாட்டிலிருந்து வந்து இந்திமொழி பள்ளிகளை துவக்கினார். அவருடைய பள்ளியிலேயே தமிழ், தெலுங்கு மொழி வகுப்புகள் பிற்காலத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன. 1920 க்கு பின்னர் பல இடங்களில் தமிழ்பள்ளி தொடங்கப்பட்டு தமிழ் கல்வி தரப்பட்டது. அப்போது ஆசிரியர்களாக இருந்த தமிழர்கள்: கெங்குபிள்ளை, வேலாயுதம் பிள்ளை, எஸ்.நாராயண பிள்ளை, இராமசாமிக் கவுண்டர், கதிர்வேலு முதலியார், அரங்கசாமி அய்யங்கார், வடிவேலு நாட்டார், பெரியசாமி, வி.கோபால் முதலியார், குப்புசாமி சாது முதலியோர்.
1937-ஆம் ஆண்டு இராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த அவிசா நந்தர் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார். இதன் பயனாக அரசு தாய்மொழி கல்விக்கு தலை அசைத்தது. 1926 முதலே தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் தமிழ் கல்விக்காக போராடி வந்தது. நாடு முழுவதும் சங்கம் பல பள்ளிகளை நிறுவியது. அவை 'சங்கப்பள்ளிகள்' என அழைக்கப்பட்டன. 1950க்குப் பிறகு தமிழ் கல்வி நலியத் தொடங்கியது. 1940 இல் ஒரு இலட்சம் தமிழர்கள்
பீஜியில் இருந்தார்கள். இன்று 30,000 பேர் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை ஏற்பட்டுள்ளது. 1986-இல் 2000 பேர் 12 பள்ளிகளில் தமிழ் படிக்கிறார்கள். இன்று பீஜியில் சங்கம் நடத்தும் 13 பள்ளிகளிலும் மற்ற மூன்று பள்ளிகளிலும் தமிழ்க் கற்றுத் தரப் படுகிறது. தமிழகத்திற்கு மேல்படிப்பிற்கு வரும் பீஜித் தமிழர்களுக்கு 16 கல்லூரிகளில் இடம் தரப்படுகிறது.
இலக்கியம் :
இலக்கியம் என்று சொல்லக்கூடிய அளவு பீஜி தமிழிலக்கியம் வளரவில்லை. சாது குப்புசாமி அவர்கள் பீஜி தமிழர்கள் பற்றி எழுதிய குறிப்பே ஒரு வரலாற்று ஆவணமாக இருந்து வருகிறது. பீஜி தோட்ட தொழிலாளர்களைப்பற்றி பாரதி பாடிய 'கரும்புத் தோட்டத்திலே' பாடல்தான் முதல் இலக்கியம் எனலாம்.
அமைப்புக்கள்:
1. தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம்:
1926-ஜனவரி 10-ஆம் நாள் ராக்கிராக்கியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழாவின் போது இச்சங்கம் அமைக்கப்பட்டது. இச்சங்கத்தை ஸ்ரீசாது குப்புசாமி என்பவர் அமைத்தார். இவருக்கு உதவியாக கோவில் முதலியார், கே.எஸ்.ராமன், நாராயணன் நாயர், கே.கருப்பன், சர்தார் நாகையா, அப்பாசாமி முதலியோர் அமைத்தனர். இன்று பீஜியில் தமிழ் இருக்கிறது என்றால் அது இச்சங்கத்தின் மூலமே என்று வரலாறு காட்டுகிறது. சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட எம்.என். நாயுடுவிற்கு 'தன்வீர்' என்ற பட்டமும், சாது குப்புசாமிக்கு 'சேவகரத்னம்' என்ற பட்டமும் 1941 ஏப்ரலில் தரப்பட்டன.
2. மதராஸ்மகா சங்கம் :
இச்சங்கம் 1927 டிசம்பர் 26-ஆம் நாள் அமைக்கப்பட்டது. வி.எம்.பிள்ளை தலைவராக செயல்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இது முக்கியத்துவமிழந்தது.
3. தென்னிந்திய வாலிபர் சங்கம்:
இச்சங்கத்தின் தலைவராக அப்பாபிள்ளை என்பவர் செயல்பட்டார். இச்சங்கம் 1931-இல் தோன்றியது. இன்று இச்சங்கத்திற்கு 20 கிளைகள் இருக்கின்றன. இச்சங்கம் நாதசுரம், தெருக்கூத்து முதலிய கலைகளில் பயிற்சி அளிக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீஜித் தீவில் தமிழர் - Tamils in Fiji - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தமிழர், சங்கம், இன்று, பீஜித், தமிழர்கள், வாழும், பீஜியில், நாடுகள், தீவில், பீஜி, இச்சங்கம், இருக்கலாம், கல்வி, தமிழ்மொழி, பிறகு, இலக்கியம், பேர், முதலியார், குப்புசாமி, சாது, பிள்ளை, தமிழ்நாட்டுத், நாள், தகவல்கள், சன்மார்க்க, இந்திய, செயல்பட்டார், இச்சங்கத்தின், பட்டமும், தலைவராக, என்பவர், அமைக்கப்பட்டது, பள்ளிகளிலும், தென், | , அப்பாபிள்ளை, living, countries, persons, tamil, tamils, fiji, tamilnadu, information, இருக்கிறது, பள்ளிகளை, செய்தார், மொழி, ஆயிரம், முதலியோர்