பீஜித் தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இருப்பிடம்
ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.
தமிழர் குடியேறிய வரலாறு :
1874-ஆம் ஆண்டு பீஜித்தீவு பிரிட்டனின் முழுக்குடியேற்றமானது. ஆள் பிடித்து கரும்புத் தோட்டத்திற்கு கொண்டு வரும் கங்காணி முறை மூலம் 1879-1916க்கு இடையே கப்பல்களில் 65,000 இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர். பீஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கத்தை அமைத்த சென்னை மாகாணத்திலிருந்து சென்ற ஸ்ரீ சாது குப்புசாமி எழுதிய குறிப்பு கூறுவதாவது: "5 வருச அக்ரிமெண்டு ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்தபோது புருஷர்களும் ஸ்தீரிகளும் ஒப்பந்தத்தில் வந்திருந்தார்கள். அச்சமயத்தில் சி.எஸ். ஆர் கம்பெனி கொலம்பர்கள் என்னும் அதிகாரிகள் ஒப்பந்த முறையில் வந்த ஜனங்களுக்குத் தன் வாயால் சொல்வதே சட்டம்.
கொலம்பர்களுக்குக்கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் 'சர்தார்' என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்த ஆள்களுக்கு ஒவ்வொரு தினமும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்ற திட்டங்களைக் கொலம்பர்கள் சர்தார்களுக்குச் சொல்வார்கள். சொல்லும் அளவுக்கு திட்டப் பிரகாரம் வேலை செய்து முடிக்காத ஆள்களுக்கு புருஷர்களாயினும் பெண் மக்களாயினும், சர்தார்களும் கொலம்பர்களும் அவர்களைக் கீழே தள்ளி மார்பு மேல் குத்தினார்கள். உதைத்தார்கள். கூலியைக் குறைத்தார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் புருஷர்களையும் ஸ்திரீகளையும் திட்டினார்கள். இதுவன்றிக் குறித்த அளவு திட்டப்படி வேலை செய்து முடிக்காததைப் பற்றிச் சில சமயங்களில் கொலம்பர்கள் மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். இதைப் பற்றிக் கோர்டில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் வரும். குறித்த அளவுப்படி செய்யாத குற்றத்தால் கோர்ட்டுகளில் அபராதமும் விதிப்பதுண்டு. கரும்பு எஸ்டேட்டுகளில் சாதாரணமாய் ஜனங்கள் செய்து வந்த வேலைகளாவது: ஏர் உழுதல், கரும்பு நடல், புல்வெட்டுதல், மோரி வெட்டுதல், கரும்பு வெட்டுதல், கரும்புக்கு உப்பு எரு முதலியன போடுதல்.
இதுவும் தவிர ஒப்பந்தக் கூலிகளாகிய புருஷர்களையும், சர்தார்மார்களும் கொலம்பர்களும் கரும்பு வயல்களில் செய்யும் இம்ஸைகளைப் பொறுக்க முடியாமல் எதிர்த்து அடித்த அக்குற்றங்களுக்காக, சர்க்காரால் தண்டணை விதிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய் வந்தவர்கள் அநேகம் பேர்கள்.
அக்ரிமெண்டில் கொண்டு வந்தவர்களுக்கு சராசரி நான்கு புருஷர்களுக்கு மத்தியில் ஒரு ஸ்தீரி வீதம் வந்தார்கள். இதனால் எண்ணற்ற கொடுமைகளும் கொலைகளும் நடந்தன. இக்குற்றங்களால் தூக்கு தண்டனையும் அடைந்தார்கள். பாரத தேசத்திலிருந்து பீஜிக்கு ஐந்து வருஷ அக்ரிமெண்டின் கெடுவு தீர்ந்து விட்ட ஜனங்கள் கய் மித்திகளிடம் லஜன் பேரில் நிலம் பிடித்துக் காடு வெட்டிப் பண்படுத்தி விவசாயம் செய்தார்கள். சிலர் சி.எஸ்.ஆர் கம்பெனி இடமே வேலையும் செய்தார்கள். மற்ற கம்பெனி களிலும் வேலை செய்தார்கள். சிலர் சொந்த வியாபாரம் செய்து வந்தார்கள். இப்படி சுயமாய்ப் பாடுபட்டு வீடுவாசல்களை அமைத்துக் கொண்டு குழந்தைக் குட்டிகளுடன் ஜ"வித்தார் கள்" -எனக் கூறும் குறிப்பிலிருந்து அன்றைய பீஜி தமிழர்களின் நிலை தெரியவருகிறது. 1915 இல் காந்தியின் நண்பரான தீனபந்து ஆண்ட்ரூஸ்துரை பீஜிக்கு வருகை புரிந்தார்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டு மனமிரங்கி பீஜி அரசிடத்திலும், கம்பெனிகாரர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி கூலி உயர்வு கிடைக்கச் செய்தார்.
சி.எஸ். ஆண்ட்ரூஸ், வெ.பியர்களின் தீராத உழைப்பினால் 1917 இல் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப்பட்டது. 1920-இல் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பீஜித்தீவில் குடியேறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தொழிலாளர்களின் 2-ஆம் கட்டப் போராட்டம் : பீஜித்தீவில் இருந்த கரும்புத் தோட்டங்கள் முழுவதும் சி.எஸ்.ஆர் என்ற ஆஸ்திரேலியா கம்பெனிக்குச் சொந்தம். ஒவ்வோர் இந்திய விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டது. அதில் ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். ஒன்பது ஏக்கர் நிலத்தில் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் சொந்தமாகப் பயிரிட்டுக்கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டி நிறைத்துக் கொடுக்கவேண்டும். அதனை கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயி பெற வேண்டும். சர்க்கரை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்கு; 70 விழுக்காடு, அரைத்து சர்க்கரை செய்த கம்பெனிக்கு. "சி.எஸ்.ஆர். கம்பெனியார் ஆறுமாத காலம் கரும்பை அரைத்துப் பிழிகிறார்கள். ஆண்டு முழுவதும் இந்தியர்களை அரைத்துப் பிழிகிறார்கள்." என்று சுவாமி அவிசானந்தர் கூறினார்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீஜித் தீவில் தமிழர் - Tamils in Fiji - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், வேலை, பீஜித், வேண்டும், கரும்பு, தீவில், கொலம்பர்கள், வாழும், செய்து, கொண்டு, கம்பெனி, நாடுகள், ", செய்தார்கள், சர்க்கரை, வாயால், தமிழ்நாட்டுத், தகவல்கள், நிலம், fiji, சிலர், பீஜிக்கு, வந்தார்கள், குறித்த, tamil, ஜனங்கள், வெட்டுதல், பீஜி, தொழிலாளர்களின், tamils, அரைத்துப், பிழிகிறார்கள், | , கம்பெனியார், ஏக்கர், பீஜித்தீவில், முழுவதும், பத்து, புருஷர்களையும், persons, இந்திய, information, ஒப்பந்தத்தில், tamilnadu, வரும், தென், பீஜித்தீவு, ஆண்டு, கரும்புத், ஒப்பந்த, வந்த, ஆள்களுக்கு, செய்ய, இருந்த, living, சொல்லும், சட்டம், countries, செய்யும், கொலம்பர்களும்