பீஜித் தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
இரண்டாம் உலகப் போர் காலத்தில் கரும்பு-விறகின் அளவுக்கு விலை குறைந்து விட்டது.
விவசாயிகள் முறையீட்டை அரசோ, கம்பெனியோ செவிசாய்க்கவில்லை. விவசாயிகளின் அவலத்தை
உணர்ந்த சுவாமி ருத்திரானந்தனர், விவசாயிகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
சுவாமிஜியும், வழக்கறிஞர் அம்பாலால் பட்டேலுக்கும் அரசு தடை உத்தரவு பிறப்பித்தது.
அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு வெளியே செல்லக்கூடாது என்பதே அது. விவசாயிகளை மீறி
கம்பெனியார் கரும்பு வெட்ட முயன்றனர். தாங்கள் விளைவித்த பயிரை தாங்களே எரித்துப்
பொசுக்கினர். பீஜி தமிழர் வரலாற்றில் இந்நிகழ்ச்சி 'லங்கா தகனம்' என
அழைக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. பீஜி விடுதலை
அடைந்தபிறகு லார்டுடென்னிங், சர்க்கரை விலையில் விவசாயிக்கு 65 விழுக்காடும், ஆலை
முதலாளிக்கு 35 விழுக்காடும் என்று தீர்மானம் செய்தார். இத்தீர்மானம்
கம்பெனியாருக்கு பாதகம் எனக்கருதி நிலங்களையும், கரும்பு ஆலைகளையும் விற்க முடிவு
செய்தனர்.
கரும்பு விவசாயத்தோடு சர்க்கரை உற்பத்தி விற்பனை ஆகிய எல்லாவற்றிலும் 45% விழுக்காடு குத்தகைகாரர்களான இந்திய விவசாயிகளுக்கு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து வெற்றியும் பெற்றனர்.
தமிழரின் இன்றைய நிலை
சமயம் :
பீஜியில் தென்னிந்தியர்களுக்கான கோயில்கள் மிகுதியாக இருக்கின்றன. பிள்ளையார், சுப்பிரமணியர், நந்திலம்பாஸா பெருமாள், சக்தி மாரியம்மன், காளியம்மன் கோயில்கள் போன்றவைகள். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் பொதுவாக எல்லாத் தென் இந்தியர்களும் 'கோவிந்தா, கோவிந்தா' எனக் கோயிலுக்குள் முழுக்கமிடுவர். இதனால் தென்னிந்தியர்களை, பீஜியர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என அழைக்கின்றனர். சுவாவில் உள்ள மகாதேவி மாரியம்மன் கோயிலைக் கட்டியவர்கள் கந்தன் பூசாரி, ரெங்கசாமி நாயுடு மற்றும் சிலர். இங்குள்ள சில கோயில்களில் பார்ப்பனரல்லாதார் பூசாரியாக பணியாற்றுகின்றனர். இக்கோயிலில் 1928 முதல் தீ மிதி திருவிழா நடந்து வருகிறது. ஒவ்வொராண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வியாழன் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிய 10 நாட்கள் நடக்கும். தீ மிதி விழாச்சடங்கில் குருபூசை, கங்கணம் கட்டுதல், சக்தி கரகம், தெருக்கூத்து முதலியவை உண்டு. திமிதித்தலின் போது அலகு குத்திக் கொள்ளுதலும் உண்டு. பீஜித் தீவில் 40 கோயில்களில் திமிப்பு விழா நடைபெறுகிறது. இது தவிர பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, பங்குனி உத்திரம், கார்த்திகை, சாதுசாமி தினம் (ஆகஸ்டு 3-ம் நாள்) முதலியனவும் கொண்டாடப்படுகின்றன. தை பூசத்திருவிழா, கிருஸ்துமஸ் சமயத்தின் போதோ, புத்தாண்டின் தொடக்கத்தின் போதோ 10 நாள் கொண்டாடப்படுகிறது. தை பூசம் சமயத்தில் கரும்பு அறுவடை முடிவடைந்த சமயமாயிருப்பதால், இத்திருநாள் பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், படையல், விரதம் சிறப்பு வழிபாடு என்று இத்திருவிழா செல்கிறது. விழாவுக்கு வரும் பிற மாவட்ட மக்களுக்கு நாடி மாவட்ட மக்கள் உணவளிக்கின்றனர். இதுபோலவே புரட்டாசி சனிக்கிழமையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாக் கோயில்களிலும், துளசி தீர்த்தமும் திருநீறும் கொடுக்கப்படுகின்றன.
வீடு :
கரும்புத் தோட்டங்களில் கொடுக்கப்பட்ட நிலங்களில் தனித்தனி வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலரின் வீடுகள் மரப்பலகைச் சுவருடன் டின் கூரை வேய்ந்தவை (Tin-Timleer) சிலருக்கே காங்கிரிட் வீடுகள் உண்டு. வீட்டில் வானொலிப் பெட்டி கட்டாயம் இருக்கும். தொலைக்காட்சி அங்கு இன்னும் வரவில்லை. வீடியோ வசதி இல்லை.
உடை :
விழா நாட்களிலும், திருமணங்களில் மட்டும் சிலர் வேட்டி, உடுத்துகின்றனர். பெண்கள் புடவை அணிவது உண்டு. பெண்கள் 'கவுன்ட்ரெஸ்' அணிகிறார்கள். பொட்டு வைத்துக் கொள்வதில்லை.
உணவு :
இட்லி, தோசை அவ்வப்போது கிடைக்கும். புட்டு, இடியாப்பம், ஆப்பம், அதிரசம், முறுக்கு ஆகிய தமிழ்ப்பண்டங்களும் இல்லாமலில்லை. மற்றப்படி சோறும், ரொட்டியும், பருப்பும், குழம்பும், ரசமும் ஊறுகாயும், புளியும், இஞ்சியும் கிடைக்கும்.
தகவல் தொடர்பு :
1958 முதல் 'மித்திரன்' என்ற எட்டு பக்க கையெழுத்து ஏடு நடத்தப்பட்டு வருகிறது. சுவாமி ருத்ரானந்தா 'சங்கம்' என்ற மாதப் பத்திரிக்கையைக் கொண்டு வந்தார். கே.ஆர். பண்டாரம் என்பவர் தொடக்க காலத்தில் தமிழ்த் திரைப்படங்களை வரவழைத்து காண்பித்தார். அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது தமிழ் வீடியோ திரைப்படங்கள் வரவழைக்கப்பட்டு பெரும்பாலோரால் பார்க்கப்படுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பீஜித் தீவில் தமிழர் - Tamils in Fiji - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், பீஜித், தீவில், கரும்பு, நாடுகள், உண்டு, வாழும், கொண்டாடப்படுகிறது, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , மிதி, வருகிறது, கோயில்களில், சிலர், கோவிந்தா, கோவிந்தா&, கிடைக்கும், விழா, மாரியம்மன், வீடுகள், வீடியோ, போதோ, பெண்கள், நாள், மாவட்ட, சர்க்கரை, living, countries, tamilnadu, persons, tamil, tamils, fiji, information, காலத்தில், விழுக்காடும், ஆகிய, கோயில்கள், வெற்றி, பீஜி, விவசாயிகளின், சுவாமி, சக்தி