விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்

81. ஒட்டகத்தின் சிறப்பு யாது?
ஒரு பாலூட்டி பாலைவனக்கப்பல். சவாரி செய்யவும் பொதி சுமக்கவும் பயன்படுவது.
82. அணில் குரங்கு என்பது யாது?
பொன்னிற மயிருள்ள சிறிய தென்னமரிக்கக் குரங்கு.
83. புதிதாக இரு குரங்குச் சிறப்பினங்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
டச்சு அறிவியலாரான மார்க் வான் ரூஸ்மாலன். இவற்றை 1990 களில் கண்டறிந்தார்.
84. விலங்குகளில் மனிதன் போல் நடப்பன யாவை?
கரடி, மனிதக்குரங்கு.
85. கடலரிமா என்றால் என்ன?
வட பசிபிக் பெருங்கடலில் வாழும் சீல் என்னும் விலங்கு மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டையாடப்படுகிறது.
86. வெளவால்களின் சிறப்பென்ன?
பறக்கும் பலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. கேளா ஒலிளைக் கேட்பவை.
87. பறக்கும் நரி என்றால் என்ன?
இது பெரிய பழந்தின்னி வெளவால். இதன் சிறகு மட்டும் 1.5 மீட்டர் அகலமிருக்கும்.
88. பெருங்கரடி என்பது யாது?
கரடி போன்ற பாலூட்டி. கறுப்பும் வெள்ளையும் கலந்தது. 1.8 மீ. உயரம். சீனாவிலும் திபெத்திலும் காணப்படுவது.
89. நம் நாட்டில் சிங்கம் எங்கு வாழ்கிறது?
அஸ்ஸாம் காடுகளில் வாழ்கிறது.
90. புலி என்பது யாது?
பூனைக்குடும்பத்தை சார்ந்த கொடிய ஊன் உண்ணும் விலங்கு. இது அழிந்து வருவதால் இதைப் பாதுகாக்க புலிப் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பயனளித்து வருகிறது. நம் நாட்டிற்கே உரியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாது, என்பது, பாலூட்டி