விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்
101. மயிர் என்பது என்ன?
பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி. தாவரப் புறத் தோலின் வளர்ச்சி. உயிர் நின்ற பிறகும் வளர்வது மயிர்.
102. குளம்பு பிளவுபட்ட விலங்குகள் யாவை?
ஆடு, மாடு.
103. குளம்பு பிளவுப்படாத விலங்கு எது?
குதிரை, கழுதை.
104. பனிக்குடம் என்றால் என்ன?
நிலம் வாழ் முதுகெலும்பு விலங்குகளின் கருப்படலம், கருவினைப் பாதுகாப்பது.
105. பூழ்ப்பை என்றால் என்ன?
பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் மூச்சு விடுவதற்காகக் கருவில் காணப்படுவது.
106. ஐவிரல் உறுப்பு என்றால் என்ன?
ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால்.
107. முதுகுத்தண்டு என்பது யாது?
உயிரணுக்களான தனிவடம். தண்டுவடம் முன்னோடி முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழனி விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது.
108. நகங்கள் என்பவை யாவை?
உயர் வகை முதுகு எலும்புகளின் விரல் நுனியில் காணப்படும் தட்டையான கடினத்தகடுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக்கூடியவை.
109. நீந்துயிர்கள் என்பவை யாவை?
ஏரி, கடல், பெருங்கடல் ஆகியவற்றில் வீறுடன் நீந்தும் விலங்குகள். எ-டு மீன், சுறா, திமிங்கிலம்.
110. நாற்கால் விலங்குகள் யாவை?
மான், மாடு, தவளை, ஒணான் முதலியவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, விலங்குகள், என்ன, என்றால்