விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்
91. வேங்கை என்பது யாது?
பூனைக்குட்டி குடும்பத்தைச்சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் காணப்படுவது.
92. வேங்கையின் சிறப்பு யாது?
நிலம் வாழ் ஊனுண்ணி. புலியை ஒத்த சீற்றமிகு விலங்கு. ஏனைய விலங்குகளை வேட்டையாடுவது.
93. மதலைப்பை விலங்குகளுக்கு இரு எடுத்துக்காட்டுகள் கூறுக.
கங்காரு, கோலா.
94. கோலா என்பது யாது?
மதலைப்பையுள்ள ஆஸ்திரேலிய விலங்கு 1 மீட்டர் நீளமுள்ளது. மரம் ஏறும்.
95. கங்காரு என்பது என்ன?
மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய பாலூட்டி இதன் நீண்ட பின்கால்கள் குதித்தோடப் பயன்படுபவை. மதலைப்பை குட்டிகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.
96. சின்னாய் என்றால் என்ன?
வட அமெரிக்க விலங்கு. நாய் போன்று குரைக்கும். அணில் போன்று கொறிக்கும்.
97. கடல் முள் எலி என்றால் என்ன?
பாலூட்டியான சிறிய கடல் விலங்கு. கூரிய முட்கள் இதன் உடலை முடியுள்ளன.
98. தொப்பூழ்க்கொடி என்றால் என்ன?
கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திசுவடம். இதன் வழியே குருதி மூலம் உள்ளே ஊட்டப்பொருள் செல்கிறது. வெளியே கழிவுப்பொருள் வருகிறது.
99. சூல்கொடி என்றால் என்ன?
நஞ்சுக்கொடி வளரும் கருவைக் கருப்பபையோடு இணைத்து ஊட்டம் வழங்கும் கொடி.
100. முதுகுத்தண்டுடை விலங்குகள் யாவை?
இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுதண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்பு வடம் ஆகிய மூன்று சிறப்பு உறுப்புகள் காணப்படும். எ-டு ஆம்பியாக்சஸ்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, விலங்கு, என்றால், இதன், மதலைப்பை, யாது, என்பது