விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்

71. ஒரக உறுப்புகள் என்றால் என்ன?
தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும்.இவை தோற்ற ஒற்றுமை உடையவை. வேலையில் வேறுபட்டவை.
72. விலங்குகளிலேயே மிக உயரமானது எது?
ஒட்டைச்சிவிங்கி, 7 மீட்டர் உயரம் உள்ளது.
73. மூன்றாம் இரைப்பை என்றால் என்ன?
அசைபோடும் விலங்குகளின் இரைப்பையின் மூன்றாம் பிரிவு.
74. திமிங்கிலத்தின் சிறப்பென்ன?
நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது, பாலூட்டி, கூரிய செவியுணர்வு மிக்கது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப் படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
75. யானையின் சிறப்பென்ன?
நில விலங்குகளில் மிகப் பெரியது, புல் பூண்டுகளை உண்ணுவது. இதன் தந்தங்கள் மதிப்புள்ளவை.
76. ஆப்பிரிக்க யானையைப் பழக்க முடியுமா?
முடியாது.
77. தும்பிக்கையான் என்பது யாது?
அற்றுப்போன துதிக்கை விலங்கு. மிகப் பழங்காலத்தைச் சார்ந்தது.
78. தடிமத்தோல் விலங்குகள் யாவை?
யானை, நீர் யானை.
79. ஒற்றைக் கொம்பன் என்பது யாது?
காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவர உண்ணி. மூக்கிற்கு மேல் நேரான ஒரு கொம்பு இருக்கும். இது ஒரு பாலூட்டி.
80. நீர் யானை என்றால் என்ன?
பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி. தாவர உண்ணி. நீரில் கிடப்பது. ஒரே அளவுள்ள கால்கள். காட்சிச்சாலை விலங்கு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யானை, விலங்கு, பாலூட்டி, என்ன, என்றால்