விலங்கியல் :: முதுகு எலும்பு உள்ள விலங்குகள்
61. பாலூட்டிகளின் சிறப்புகள் யாவை?
1. குட்டிப்போட்டு பால் கொடுப்பவை.
2. உடலில் மயிர் உண்டு.
3. குறுக்குத் தசை உண்டு.
4.உடல்வெப்பநிலை மாறா விலங்குகள்.எ-டுஎருமை, மான்.
62. இறுதி இரைப்பை என்றால் என்ன?
பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை. இதுவே உண்மை இரைப்பை.
63. அசைபோடுதல் என்றால் என்ன?
விழுங்கப்பட்ட உணவு இரைப்பையிலிருந்து வாய்க்குக் கவளங்களாகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு உமிழ் நீருடன் கலந்து நன்கு அரைக்கப்படுகிறது, மீண்டும் விழுங்கப்படுகிறது. எ-டு பசு, ஆடு.
64. அசைபை என்றால் என்ன?
பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் முதல் இரைப்பை.
65. அசைபோடும் விலங்குகள் யாவை?
பசு, ஆடு, எருமை.
66. கொறிக்கும் விலங்குகள் யாவை?
அணில், எலி முதலிய பாலூட்டிகள் கொறிக்கும் விலங்குகள் ஆகும்.
67. மரம்வாழ் விலங்கு எது?
அணில்,
68. காயடித்தல் என்றால் என்ன?
பிறப்புறுப்புகளைக் குறிப்பாக விரையை நீக்குதல். இது பொதுவாகக் கால்நடைகளுக்குச் செய்யப்படுவது. எ-டு காளை மாடுகள்.
69. ஒரகப் பல்லமைவு என்றால் என்ன?
எல்லாப் பற்களும் ஒரே வகையாக உள்ள பல்லமைவு. எ-டு தவளை, பல்லி.
70. வேற்றகப் பல்லமைவு என்றால் என்ன?
பற்கள் வேறுபட்டு அமைந்திருத்தல். வெட்டுப்பல், கோரைப் பல், கடைவாய்ப்பல். எ-டு மனிதன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதுகு எலும்பு உள்ள விலங்குகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், இரைப்பை, விலங்குகள், பல்லமைவு, அசைபோடும், முதலிய, யாவை