விலங்கியல் :: நோபல் பரிசுகள்

71. வினையாற்றலுள்ள உயிரியல் பொருள்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
சர் ஜான் வேன் 1982இல் நோபல் பரிசு பெற்றார்.
72. வளர்ச்சிக் காரணிகள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஸ்டேன்லி கோகன் 1986இல் நோபல் பரிசுபெற்றார்.
73. நச்சுயிரித் தன்மையுள்ள கட்டிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
ஹேரோல்டு வர்மஸ், பிஷன் ஆகிய இருவரும்1989இல் நோபல் பரிசு பெற்றனர்.
74. உயிரணுக்களின் தனி அயனி வழி வேலைக் கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
எர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும் 1991இல் நோபல் பரிசுபெற்றனர்.
75. கண்ணறை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
பிஷர், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் நோபல் பரிசு பெற்றனர்.
76. பாலிமரேஸ் தொடர்வினைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
கேரி மில்லிஸ் 1993இல் நோபல் பரிசுபெற்றார்.
77. பிளவு மரபணுக்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தவர்கள் யார்? இவர்களுக்கு இதற்காக எப்பொழுது நோபல் பரிசு கிடைத்தது?
பிலிப் ஷார்ப், இராபர்ட்ஸ் ஆகிய இருவரும் 1977இல் கண்டறிந்தவர். இதற்காக 1993இல் 16 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்றனர்.
78. பெருமூலக்கூறுகளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
பால் ஜே. புளோரே 1994இல் நோபல் பரிசு பெற்றார்.
79. தொடக்கக் கருவளர்ச்சியின் மரபுக் கட்டுப்பாட்டை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
வோல்கார்டு, டாக்டர் கிறிஸ்டியானி லூயிஸ், வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர். இவர்களில் கிறிஸ்டியாணி நோபல் பரிசு பெற்ற பத்து மகளிரில் ஒருவர்.
80. கருவளர்ச்சி மரபணுக் கட்டப்பாடு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
எட்வர்டு பி. லூயிஸ், வோல்கார்டு, வீசக்சு ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், ஆகிய, பெற்றவர்கள், பெற்றனர், பெற்றவர், இருவரும்