விலங்கியல் :: நோபல் பரிசுகள்

1. தொண்டை அடைப்பானுக்கு எதிர் நச்சைக் கண்டறிந்தவர் யார்?
அடால்ப் வான் பெரிங் 1901 இல் நோபல் பரிசுப் பெற்றார்.
2. காலரா என்புருக்கி நோய் ஆகிய இரண்டையும் தோற்றுவிக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
இராபர்ட் காச் 1905 இல் நோபல் பரிசு பெற்றார்.
3. பிளாஸ்மோடியத்தைக் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
லூயி லெவரன் 1907இல் நோபல் பரிசு பெற்றார்.
4. கட்டிலா நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
எட்வர்டு புக்னர் 1907இல் நோபல் பரிசு பெற்றார்.
5. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார் ?
பால் எரிலிச் 1908 இல் நோபல் பரிசு பெற்றார்.
6. கண்ணறை வேதியியலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆல்பிரட் கோசல் 1910 இல் நோபல் பரிசு பெற்றார்.
7. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜீல்ஸ் பார்டெட் 1919 இல் நோபல் பரிசு பெற்றார்.
8. தசையில் வெப்பம் உண்டாவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆர்க்கிபால்டுவிவியன் 1922இல் நோபல் பரிசு பெற்றார்.
9. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற இருவர் யார்?
சர் பேண்டிங், மாக்லியாடு ஆகிய இருவரும் 1923இல் பெற்றனர்.
10. பித்தநீர்க்காடியை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஹெயின்ரிச் விலேண்ட்1927இல் நோபல் பரிசு பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றார், பெற்றவர், ஆராய்ந்ததற்காக, ஆராய்ச்சிக்காக