விலங்கியல் :: நோபல் பரிசுகள்
41. ஸ்டெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
வாக்ஸ்மன் 1952இல் நோபல் பரிசு பெற்றார்.
42. இடைநிலை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
பிரிட்ஸ் ஆல்பர்ட் லிப்மன் 1953இல் நோபல் பரிசு பெற்றார்.
43. ஆக்சிஜன் ஏற்ற நொதிகளின் செயல் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆக்சல் ஹீயுகோ தியேடர் தியோரெல் 1955இல் நோபல் பரிசு பெற்றார்.
44. பாலிஸ்ப்டைடு வளர்தூண்டியை முதன்முதலாகத் தொகுத்தவர் யார்? இதற்காக நோபல் பரிசு எப்பொழுது பெற்றார்?
வின்சண்ட் டியு விக்னியார்டு. 1955இல் நோபல் பரிசு பெற்றார்.
45. நம் உடல்பொருள்களை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
டேனியல் போவட்1957இல் நோபல் பரிசு பெற்றார்.
46. மரபணுக்களின் வேதிநிகழ்ச்சி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
ஜார்ஜ்வெல்ஸ் பீடில் 1958இல் நோபல் பரிசுபெற்றார்.
47. மரபணுக்கள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
டாட்டம், பீடில், லெடர்பர்க் ஆகிய மூவரும் 1958இல் நோபல் பரிசு பெற்றனர்.
48. செயற்கைத் தடுப்பாற்றல் தாங்குதிறனைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
சர் பிராங்க் மாகபர்லேன் பர்னே 1960இல் நோபல் பரிசுபெற்றார்.
49. ஈட்டிய தடுப்பாற்றலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
சர் பீட்டர் பிரையன் மெடவார், பர்டைட் ஆகிய இருவரும் 1960 நோபல் பரிசு பெற்றனர்.
50. காதுநத்தை எலும்பின் தூண்டுதல் பொறிநுட்பத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?
ஜார்ஜ் வான் பெர்க்சி 1961இல் நோபல் பரிசுபெற்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றார், பெற்றவர், பரிசுபெற்றார், ஆராய்ச்சிக்காக, பரிசுபெற்றவர்