விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்
51. பெயர்ப்பு என்றால் என்ன?
தூது ஆர்என்ஏவில் பதிந்துள்ள மரபுச் செய்தி பெயர்க்கப் பெற்றுப் புரதமாக மாற்றப்படுதல். ரிபோசோம்களில் பகர்ப்பு நடைபெறுவது.
52. எஸ்டிஎம் என்பது என்ன? இதைக் கண்டுபிடித்தவர் யார்?
இதன் விரிவு Site-Directed Mutagenesis. இடவழிப்படு சடுதித் தோற்றம் என்பது இதன் பொருள். இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த்தொழில் நுட்ப இயலார் மைக்கல் சிமித். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதியை இவர் பெற்றார் இந்நுணுக்கத்தைக் கொண்டு புதுப்பண்புள்ள புரதங்களின் உண்டாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது.
53. அலெக் ஜெப்ரேஸ் செய்த அருஞ்செயல் யாது?
1984இல் டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு விரல்பதிவு நுணுக்கத்தைக் கண்டுபிடித்தார்.
54. இந்தியாவில் டாக்டர் லால்ஜி சிங் செய்த அருஞ்செயல் யாது?
1988இல் டிஎன்ஏ விரல் பதிவைக் கண்டுபிடித்தார். இதற்கு இவர் அனைத்து டிஎன்ஏ துருவியை அமைத்துள்ளார்.
55. டிஎன்ஏ விரல்பதிவின் பயன்கள் யாவை?
1. உரிய பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்கலாம்.
2. திருடர்களையும் கொள்ளையர்களையும் கண்டுபிடிக்கலாம்.
3. திசுவகைகளை உறுதிசெய்யலாம்.
4. குறிப்பிட்ட பூச்சி இனத்தை உறுதிசெய்யலாம்.
56. பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்பது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?
B பிரிவு குருதியணுக்கள் குறைவாகவும் C பிரிவு குருதியணுக்கள் அதிகமாகவும் இருந்தால் பிறப்பது ஆண் என்பது உறுதி. இதையே தற்காலத்தில் அலகிடும் ஆய்வுகளும் செய்கின்றன.
57. ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் பிறப்பது எவ்வாறு?
மனித நிறப்புரிகள் 23 இணைகள். ஆணில் ஒர் இணையில் மட்டும் X, Y என்னும் நிறப்புரிகள் இருக்கும். பெண்ணில் இந்த வேறுபாடு இல்லை. எல்லாம் XX தான். ஆணிலுள்ள X பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது பெண். ஆணிலுள்ள Y பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது ஆண்.
XX - பெண்
XY - ஆண்.
58. ஒரே சமயம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றன?
ஒரு விந்தணு ஒரு கருமுட்டையோடு சேரும்பொழுது உண்டாவது கருவணு. இதிலிருந்து பிறப்பது ஒரு குழந்தை. புணர்ச்சிகளின் பொழுது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண் அணு, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டையோடு சேரும் பொழுது பிறப்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும். இது நாய், பன்றி முதலிய விலங்குகளில் வழக்கமாக அதிகம்.
59. தண்டுக் கண்ணறைகள் (stem cells) என்றால் என்ன?
நம் உடலில் திசுக்களில் காணப்படுபவை.இவை முதிர்ச்சியடையாக் கால்வழிக் கண்ணறைகளாகும். திசுக்களையும் உறுப்புகளையும் உண்டாக்கும் கண்ணறைகளை உற்பத்தி செய்பவை.
60. இந்த ஆராய்ச்சியின் மருத்துவச் சிறப்பென்ன?
அறுவைக்குப்பின் திசுக்களை எளிதில் குணப்படுத்தலாம். வெண்புற்றுள்ள நோயாளிகளுக்கு நலமுள்ள குருதியணுக்களை வழங்கலாம். திசுக்களை மாற்றிப் பொருத்தலாம். (கண்)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பிறப்பது, மேற்பட்ட, டிஎன்ஏ, என்பது, பெண், எவ்வாறு, என்ன