விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்

21. ஒத்த பண்பு மரபணுக்கள் என்பவை யாவை?
உயிரணுக்கள் சிறப்பாக்கம் பெற்று, உடலின் பல உறுப்புகளையும் உண்டாகுமாறு செய்பவை. வேறுபெயர் தேல்கி மரபணுக்கள்.
22. 1993ஆம் ஆண்டின் மூலக்கூறு எனச் சிறப்பிக்கப்பட்டது எது?
பி 53 மரபணு. பல புற்றுநோய்களால் அடிக்கடி ஏற்படும். சடுதிமாற்றங்களுக்கு இலக்காக இருப்பது இது.
23. 1993ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பென்ன?
குடல்புற்றுநோய்க்குரிய மரபணு அடையாளங் கண்டறியப்பட்டது.
24. கொல்மரபணு என்றால் என்ன?
மாற்றமடைந்த இணைமாற்று. தானுள்ள உயிரைக் கொல்வது.
25. மரபுநிகழ்தகவு என்றால் என்ன?
ஒர் உயிர்த் தொகுதியில் குறிப்பிட்ட மரபணு அடிக்கடி தோன்றுதல்.
26. மரபணு நிலையம் என்றால் என்ன?
டிஎன்ஏ துணுக்குகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகத் திரட்டுதல். இத்திரட்டில் குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும்.
27. மரபணு மதிப்பு என்றால் என்ன?
உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த்தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றுநிலை மரபணு இணைகள் ஒர் இணைமாற்றுக்கு அல்லது மற்றொன்றிற்கு ஒரியல் இணைகளாதல். இது வாய்ப்பாக நிகழ்வது, தேர்வாக அன்று.
28. மரபுக் கலவை என்றால் என்ன?
உயிர் அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந் துள்ள மரபுக்காரணிகளின் தொகுமொத்தம்.
29. மரபணுச் சேமகம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகுதியின் எல்லா மரபணுக்களின் தொகுமாத்தம்.
30. மரபணுச்சுமப்பி என்றால் என்ன?
ஒடுங்குமரபணுவைச் சுமந்து செல்லும் உயிரி. எ-டு நிறக்குருடு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், மரபணு, குறிப்பிட்ட