விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்
![Evolution and Genealogy](images/evolution_and_genealogy.jpg)
11. துணை நிறப்புரி என்றால் என்ன?
இது பால் நிறப்புரி.
12. எக்ஸ் நிறப்புரி என்றால் என்ன?
பாலின நிறப்புரிகளில் ஒன்று. பால் தன்மையை உறுதி செய்வது. ஆண், பெண் இருவரிடமும் உள்ளது.
13. ஒய் நிறப்புரி என்றால் என்ன?
இது பால் நிறப்புரியாகும். வேறுபட்ட பாலில் மட்டும் காணப்படும். அதாவது ஆண்களில் மட்டும் தெரிவது.
14. மரபணு என்றால் என்ன?
நிறப்புரியில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள காரணி. இது தனியாள் மரபுப் பண்புகளைக் குறிப்பது. மரபுப் பண்பின் அலகு.
15. மரபணுவியல் அல்லது மரபியல் என்ன?
உயிரியின் கால்வழி பற்றி ஆராயும் உயிரியல் துறை.
16. மரபணுவியலின் தந்தை யார்?
ஜான் கிரிகார் மெண்டல்.
17. மரபணு (Gene) என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்? எப்பொழுது?
1909இல் வில்கம் ஜொகான்சன் மரபணு என்னும் சொல்லை உருவாக்கினார்.
18. இவர் நிலைபெறச் செய்த மற்ற இரு சொற்கள் யாவை?
புறமுத்திரை (Phenotype), மரபுமுத்திரை (genotype) என்னும் இரு சொற்கள் ஆகும்.
19. தலைமை மரபணு என்றால் என்ன?
நம் உடலில் பல உறுப்புகளை உருவாக்குவதில் சிறப்பான பங்குபெறும் மரபணு. இது டாக்டர் ஜோனதான் குக் என்பார் தம் குழுவினரோடு இலண்டன் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டுபிடித்துள்ளார். இதனால் வளர்ச்சிக்குரிய காரணத்தை அறிய இயலும்.
20. நோய் மரபணு என்றால் என்ன?
ஜப்பான் அறிவியலார் 1990களில் கண்டுபிடித்தது. இது பிற்போக்கு நச்சியத்தின் ஒரு பகுதி. மூட்டுவலியை உண்டாக்குவது. ஒரு புற்றுநோய் மரபணு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மரபணு, என்ன, என்றால், நிறப்புரி, என்னும், பால்