விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்
41. ஆர்டிஎன்.ஏவைப் புனைந்தவர்கள் யார்? எப்பொழுது?
1972இல் பால்பர்க், டேல் கெய்சர் ஆகிய இருவரும் புனைந்தனர்.
42. நொதி பாலிமரேஸ் I என்பதை யார் எப்பொழுது அடையாளங் கண்டறிந்தனர்?
1959இல் கோர்ன்பர்க், செவிரே ஒக்கோ ஆகிய இருவரும் அடையாளங் கண்டறிந்தனர். இந்நொதி டிஎன்ஏ தொகுப்பை ஊக்குவிப்பது. இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
43. ஹென்றி எர்லிச் அறிவித்தது யாது?
மயிரிழைப் புரி ஒன்றில் டிஎன்ஏவின் தனியன் ஒன்றை இனங் கண்டறியும் முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இவர் அறிவித்தார்.
44. டிஎன்ஏ கணிப்பொறி என்றால் என்ன?
டிஎன்ஏ மூலக்கூறு அடிப்படையில் வேலை செய்யும் மிகப் புதிய கணிப்பொறி. இதில் பிழை ஏற்படாதது தனிச்சிறப்பு. வேதித் தொகுதிகளையும் உயிரியல் தொகுதிகளையும் ஆராயப் பயன்படும்.
45. டிஎன்ஏ வழிக் கணித்தல் என்றால் என்ன?
இது ஒரு புதிய தொழில்நுட்பம். டிஎன்ஏவிற்குச் செய்திகளைத் தேக்கும் திறன் நிரம்ப உண்டு. கணிப்பொறி போன்று தன் செயல்களைச் செய்வது. இதற்கு நொதிகள் உதவுபவை. இந்நொதிகள் உயிரியல் வினை ஊக்கிகள் ஆகும். தேவைப்பட்ட செயல்களைச் செய்ய இவை மென்பொருள்போல் உதவுபவை.
46. ஆர்என்ஏ என்றால் என்ன?
உயிர்அணுவின் கருவிலும் அதற்கு வெளியிலும் காணப் படும் விந்தை வேதிப்பொருள், ரிபோஸ் உட்கரு காடியாகும். கால்வழியைக் கட்டுப்படுத்த டிஎன்ஏவிற்கு உதவுவது.
47. யா-மிங் ஹவ், பால் ஷிமல் ஆகிய இருவரின் கண்டுபிடிப்பு யாது?
மாற்று ஆர்என்ஏவில் காணப்படும் மரபுத் தொகுதியிலுள்ள ஒரு பகுதியை எவ்வாறு பூட்டவிழ்ப்பது என்பதை 1989இல் கண்டுபிடித்தனர்.
48. ஆர்என்ஏ உலகம் என்பது யாது?
இது மூலக்கூறு உயிரியலுக்குரியது. டிஎன்ஏ மரபணுப் பொருளாக வருவதற்கு முன் இவ்வுலகம் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கருத்துப் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
49. இக்கருத்து எவ்வாறு புகழ்பெற்றது?
டாக்டர் சிட்னி ஆல்ட்மன், டாக்டர் தாமஸ் ஆகிய இருவரும் உயிரியல் வினையூக்கியாக ஆர்என்ஏ செயற்படவல்லது என்பதைக் கண்டறிந்த பின் இக்கருத்துப் புகழ்பெற்றது.
50. இவ்விருவரும் எப்பொழுது எதற்காக நோபல் பரிசு பெற்றனர்?
ஆர்என்ஏ மூலக்கூறுகள் நொதிப்பண்புகள் உள்ளவை என்று கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு 1989இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - டிஎன்ஏ, ஆகிய, ஆர்என்ஏ, என்றால், என்ன, கணிப்பொறி, உயிரியல், பரிசு, இருவரும், நோபல், எப்பொழுது, யாது