விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்

1. உயிரிலித் தோற்றம் என்றால் என்ன?
உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்ப்பொருள்கள் தோன்றுதல்.
2. படிமுறை வளர்ச்சி அல்லது பரிணாமம் என்றால் என்ன?
எளிய உயிரிலிருந்து (அமீபா) அரிய உயிர் (மனிதன்) எவ்வாறு ஒரு மலர்ச்சியின் மூலம் தோன்றியது என்பதாகும்.
3. இதை விளக்கி அழியாப் புகழ்பெற்றவர் யார்?
சார்லஸ் தார்வின்
4. மூதாதைத் தோற்றம் என்றால் என்ன?
கால்வழியில் மூதாதையர் பண்புகள் தோன்றுதல்.
பெற்றோர் பண்புகள் தோன்றுதல் இல்லை.
5. நிறப்புரி (குரோமசோம்) என்றால் என்ன?
கால்வழியுள்ள மரபணு. ஓரிணை இழைப்பொருள். உயிர் வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கை வேறுபடும். 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23. டிரசோபைலா 4.
6. இதை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?
1880களில் வால்தர் பிளிமிங் என்பார் கண்டறிந்தார்.
7. மார்கன் தம் புகழ்வாய்ந்த ட்ரோசோபைலா கனி ஆராய்ச்சிகளை எப்பொழுது தொடங்கினார்?
1907இல் தொடங்கினார். கால்வழியில் நிறப்புரிகளின் பங்கை மெய்ப்பித்து, சடுதிக் கொள்கையை நிறுவினார்.
8. முதல் நிறப்புரி செயற்கையாக எப்பொழுது யாரால் உருவாக்கப்பட்டது?
1983 இல் ஆண்ட்கு முர்ரே, ஜேக் கோஸ்டாக் ஆகிய இருவரும் இந்நிறப்புரியை உருவர்ககினார்.
9. தற்புரி என்றால் என்ன?
இணையாகவுள்ள உடல் நிறப்புரிகளின் பாலை உறுதி செய்யப் பயன்படாதவை.
10. பால் நிறப்புரி என்றால் என்ன?
இது பாலை ஆணா பெண்ணா என்று உறுதி செய்வது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நிறப்புரி, தோன்றுதல்