விலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்
31. மரபுப்புரி (gene+some = genome) என்றால் என்ன?
ஒர் உயிரியில் அமைந்துள்ள நிறப்புரிகளின் நிறைத் தொகுதி.
32. மனித மரபுப்புரித்திட்டம் எப்பொழுது தொடங்கிற்று? எப்பொழுது இது முடியும்?
1988இல் தொடங்கிற்று. 2003இல் முடியும்.
33. நம் உடலில் சற்றேறக் குறைய எத்தனை மரபணுக்கள் உள்ளன?
1 1/2 இலட்சம் மரபணுக்கள் உள்ளன.
34. இதுவரை தெரிந்த தெரியாத மரபணு நோய்கள் யாவை?
தெரிந்தவை 5000; தெரியாதவை பல.
35. இத்திட்டத்தின் நோக்கம் யாது?
மனிதநோய்களை ஒழித்து மனிதநலம் பேணுவது ஆகும்.
36. டிஎன்ஏ என்றால் என்ன?
உயிரணுவின் கருவில் காணப்படும் விந்தை வேதிப் பொருளான டி ஆக்சிரிபோஸ் உட்கரு காடியாகும். கால்வழியைக் கட்டுப்படுத்துவது.
37. உட்கரு காடிகளை முதன்முதலில் உற்றுநோக்கியவர் யார்?
முதன்முதலில் 1869இல் ஆல்தோ பிரடரிச் மிஷர் என்பார் உற்றுநோக்கினர்.
38. இந்த அமிலங்களில் சர்க்கரை உள்ளது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
1909இல் போபஸ் ஏரான் தியோடர் எல்வீன் முதன் முதலில் கண்டறிந்தார்.
39. டி.என்.ஏவை விளக்கும் புகழ்பெற்ற மாதிரி எது?
வாட்சன்-கிரிக் மாதிரி. அது ஒர் இரட்டைச்சுருள்.
40. டிஎன்ஏ எந்த ஆண்டு யாரால் பிரிக்கப்பட்டது?
1969இல் மெய்சர் என்பவரால் பிரிக்கப்பட்டது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -