இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 4
31. சிப்பப்புள்ளியியல் சிப்ப எந்திர அடிப்படைகளை அளித்தவர் யார்?
1926இல் பால் டிராக் என்பவர் அளித்தார்.
32. நான்காம் சிப்ப எண்ணை அறிமுகப்படுத்தியவர் யார்?
சாமர் பீல்டு, 1920.
33. மீள்இயல்பாகும் சிப்பக் கொள்கையை (QED) உருவாக் கியவர்கள் யார்?
ரிச்சர் பெயின்மன், ஜூலியன் சிமர் சிவன்கர், 1948.
34. இதைப் பற்றிய ஆய்வை முதன்முதலில் செய்தவர் யார்?
ஜப்பான் அறிவியலார் டொமோன்கா 1943இல் செய்தார்.
35. சிப்பத் தாவல் என்றால் என்ன?
ஒரு சிப்ப நிலையிலிருந்து மற்றொரு சிப்ப நிலைக்கு ஒரு தொகுதியில் ஏற்படும் மாற்றம். எ-டு அணு அல்லது மூலக்கூறு.
36. சிப்பவிசை இயல் என்றால் என்ன?
சிப்பக் கொள்கையிலிருந்து உருவான விசைஇயல். மூலக் கூறுகள், அணுக்கள் ஆகியவற்றின் பண்புகளை விளக்கப் பயன்படுவது.
37. சிப்ப எண் என்றால் என்ன?
சிப்ப நிலை அளவுக்கு உட்பட்ட ஆற்றல், கோண உந்தம் முதலியவற்றின் மதிப்பைக் குறிக்கும் எண்.
38. சிப்பநிலை என்றால் என்ன?
சிப்ப எண்களால் விளக்கமுறும் சிப்பத் தொகுதியின் நிலை.
39. சிப்பப் புள்ளி இயல் என்றால் என்ன?
மரபுவழி விசை இயலின் விதிகளுக்குட்படும் துகள் தொகுதியினைப் புள்ளி இயல் நிலையில் விளக்குதல். இதை இந்திய அணுஇயற்பியலார் எஸ்.என்.போஸ் அவர்களும் ஆராய்ந்துள்ளார்கள். அது போஸ் புள்ளியியல் எனப் பெயர் பெறும்.
40. சிப்பக் கொள்கை என்றால் என்ன?
வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை விளக்கும் கொள்கை. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் hvக்குச் சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது. h- பிளாங்க் மாறிலி. w- கதிர்வீச்சு அதிர்வெண்; பிளாங் மாறிலி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சிப்ப, என்ன, என்றால், யார், இயல், சிப்பக்