இயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 6

51. இக்கொள்கை எப்பொழுது சரிபார்க்கப்பட்டது? எவ்வாறு?
செர்னில் (CERN) மோதல் ஆய்வுகளில் இக்கொள்கை சரிபார்க்கப்பட்டது. நான்கு வினைகளுக்கும் உரிய ஒரே கொள்கையை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
52. நடுவன் (மிசான் என்றால் என்ன?
நடுவணு. அடிப்படைத் துகள். மின்னணுவைவிட நிறை மிக்கது. முன்னணு அல்லணு ஆகிய இரண்டை விட இலேசானது. உட்கருவன், அணுக்கரு ஆகியவற்றிற் கிடையே ஆற்றல் பரிமாற்றத்திற்குக் காரணமாக இருப்பது.
53. எதிர் ஏற்றப் பொருள் என்றால் என்ன?
புவிக்கு அப்பாலுள்ள கற்பனைப் பொருள். புவியிலுள்ள பொருள் போன்றே துகள்களைக் கொண்டது. ஆனால், துகள்கள் எதிர்மின்னேற்றமுள்ளவை. காந்த முனைத் திறன் உண்டு.
54. எதிர்ஏற்றத் துகள் உள்ளது என்பதை யார் எப்பொழுது முன்மொழிந்தார்?
பால் டிரக் என்பவர் 1930இல் முன்மொழிந்தார்.
55. கரும்பொருள் என்றால் என்ன?
பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 20% உள்ளது. எரிடானஸ் விண்மீன் கூட்டத்திலுள்ளது. இதை பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ என்பவர் 1990இல் கண்டுபிடித்தார். இதை கிர்கார்ப்பு என்பவரும் 1860இல் ஆராய்ந்துள்ளார்.
56. கந்துளை என்றால் என்ன?
இடக்காலப்பகுதி. இதிலிருந்து பொருளோ ஆற்றலோ தப்ப முடியாது. இது விண்மீனாக இருக்கலாம். இங்கு விடுபடுவிரைவு ஒளியின் விரைவை விட மிகுதி. இத்துளைகள் தோற்ற மீன்களின் ஆற்றல் ஊற்றுகளாகக் கருதப்படுபவை.
57. நியூட்ரினோவுக்கு அப்பெயர் அளித்தவர் யார்?
பெர்மி, 1931.
58. நியூட்ரினோ (அல்லனோ) உள்ளது என்பதை பவுலி எப்பொழுது முன் மொழிந்தார்?
1931இல் முன்மொழிந்தார்.
59. நியூட்ரினோக்கள் எப்பொழுது முதல் தடவையாக உற்றுநோக்கப்பட்டன?
1956இல் உற்று நோக்கப்பட்டன.
60. மூவகை நியூட்ரினோக்கள் யாவை?
1. மின்னணு சார்ந்தவை.
2. மீயுயான் சார்ந்தவை.
3. டோ நியூட்ரினோ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
துகள் இயற்பியல் - பக்கம் - 6 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பொருள், எப்பொழுது, என்ன, என்றால், முன்மொழிந்தார், உள்ளது